6 மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்: பேஸ்புக்

பேஸ்புக்கில் இருந்து கடந்த ஆறு மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.   

Last Updated : May 24, 2019, 12:18 PM IST
6 மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்: பேஸ்புக் title=

பேஸ்புக்கில் இருந்து கடந்த ஆறு மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.   

மனத வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிவிட்ட பேஸ்புக் கணக்கு சிலருக்கு பொழுது போக்கு., பலருக்கு சேமிப்பு கிடங்கு. இந்நிலையில் தற்போது போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,

கடந்த அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது. மேலும் கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Trending News