Flipkart Super Value Days: சமீபத்தில், ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனை தொடங்கியது. இதில் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களில் பம்பர் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த விற்பனை டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 18ஆம் தேதி வரை பிளிப்கார்ட்டின் இந்த சேல் நடைபெறும்.
iPhone 15 Discount Offer
இந்த சேலில், ஐபோன்களில் மிக அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையில் மீண்டும் ஐபோன் 15 =இன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தள்ளுபடியை முந்தைய விற்பனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த சலுகை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் நீங்கள் விரும்பினால், சாதனத்தை மிகவும் மலிவான விலையில் இதில் வாங்கலாம். ஐபோனுக்கு சேலில் ரூ.8,901 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த டீலைப் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
iPhone 15 இல் கிடைக்கும் தள்ளுபடி சலுகை
iPhone 15 தற்போது Flipkart விற்பனையில் எந்த சலுகையும் இல்லாமல் 60,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனினும், இந்த மொபைல் போனின் உண்மையான விலை ரூ.69,900 ஆகும். நிறுவனம் ஃபோனில் 12% வரை தள்ளுபடி வழங்குகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனில் ரூ.8,901 வரை சேமிக்க முடியும். இது தவிர, HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI மூலம் ஐபோனில் 10% வரை தள்ளுபடி கிடைக்கும். இது இந்த டீலை மேலும் சிறப்பானதாக்குகிறது.
iPhone 15: பரிமாற்ற சலுகை
இந்த பிளிப்கார்ட் சேலில் நிறுவனம் ஐபோன் 15 இல் ஒரு பெரிய எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. இது தொலைபேசியின் விலையை கணிசமாகக் குறைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்ற சலுகை மூலம் ரூ.38,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், இந்த தள்ளுபடி உங்கள் பழைய தொலைபேசியின் நிலையைப் பொறுத்தது. நீங்கள் iPhone 13 ஐ எக்ஸ்சேஞ்ச் செய்கிறீர்கள் என்றால், நேரடியாக 24,000 ரூபாய் வரை போனில் சேமிக்கலாம், இது iPhone 15 இன் விலையை கணிசமாகக் குறைக்கிறது. அதே நேரத்தில், நீங்கள் ஆண்ட்ராய்டு போனை பரிமாறிக்கொண்டால், இந்த மதிப்பு மேலும் குறையலாம். எனினும், ஃபிளாக்ஷிப் போன்களில் நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெற முடியும்.
SAMSUNG Galaxy S23 FE: சாம்சங் கேலக்சி எஸ்23 எஃப்இ
Flipkart இன் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் SAMSUNG Galaxy S23 FE மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. இந்த போன் பாதி விலையில் விற்பனையில் கிடைக்கிறது. விற்பனையின் மூலம் ரூ. 34,999 க்கு இந்த போனை வாங்கலாம். இதன் உண்மையான விலை ரூ.79,999 ஆகும்.
Motorola Edge 50 Pro 5G: மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களும் விற்பனையில் ரூ.10,000 குறைந்த விலையில் கிடைக்கும். விற்பனையில் உள்ள இந்த போனின் விலை ரூ.31,999 ஆக உள்ளது. நிறுவனம் இதை ரூ.41,999க்கு அறிமுகப்படுத்தியது. ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் போனில் ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.
மேலும் படிக்க | ஒருவழியாக 5ஜியை அறிமுகப்படுத்திய வோடபோன் ஐடியா! என்ன சிறப்பம்சங்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ