கட்டண விதிகளை திருத்திய TRAI... Voice + SMS பேக் இனி கட்டாயம்

பயனர்கள் தங்களுக்குத் தேவையான சேவைக்கு மட்டுமே பணம் செலுத்தலாம் என்ற அளவில் அதிக விருப்பத்தை வழங்கும் வகையில் TRAI கட்டண விதிகளை திருத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2024, 11:47 AM IST
  • அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிம் கார்டுகளுக்கான தற்போதைய விதிகள்.
  • கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட ஃபீச்சர் போன்களை தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்.
  • சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை TRAI மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கட்டண விதிகளை திருத்திய TRAI... Voice + SMS பேக் இனி கட்டாயம் title=

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI திங்களன்று கட்டண விதிகளை திருத்தயுள்ளது. மொபைலில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கு என, தனி 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட ஃபீச்சர் போன்களை தொடர்ந்து பயன்படுத்தும் இந்தியாவில் உள்ள 15 கோடி சந்தாதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, வீடுகளில் பிராட்பேண்ட் வைத்திருக்கும் பல மூத்த குடிமக்கள் தங்கள் மொபைல் போன்களுக்கு இணையத்துடன் கூடிய 'ரீசார்ஜ் திட்டம்' தேவையில்லை என்ற நிலையில், இந்த புதிய விதி நுகவோர்களுக்கு தான் விரும்பிய சேவைகளுக்கு மட்டுமே பணம் செலுத்தும் நிலை உருவாகும்.

பயனர்கள் தங்களுக்குத் தேவையான சேவைக்கு மட்டுமே பணம் செலுத்தலாம் என்ற அளவில் அதிக விருப்பத்தை இந்த கட்டண விதி வழங்கும் என TRAI கூறுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை TRAI மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

தற்போது, ​​தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா பேக்குகளை மட்டுமே அதிகம் உருவாக்குகின்றன. குறிப்பாக அழைப்பு மற்றும் செய்தி சேவைகள் மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு தேவையற்ற நிதி சுமையை அளிக்கிறது. இந்த நடவடிக்கையால், நுகர்வோர் தான் வழக்கமாக பயன்படுத்தும் சேவைகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | BSNL வழங்கும் அசத்தலான ப்ராண்ட்பேண்ட் பிளான்... 333 ரூபாயில் மாதம் 1300GB...

டேட்டாவைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு நன்மை குறித்து TRAI கூறுகையில், “ அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு வவுச்சர்களை கட்டாயமாக்குவது, டேட்டா (இன்டர்நெட்) தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் விருப்பத்தை வழங்கும். 

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிம் கார்டுகளுக்கான தற்போதைய விதிகள்

டிசம்பர் 1, 2023 முதல் சிம் கார்டு வழங்குவது தொடர்பான புதிய விதிமுறைகளை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

1. அனைத்து சிம் கார்டு விற்பனையாளர்களும் (PoS முகவர்கள்) தொலைதொடர்பு ஆபரேட்டர்களிடம் பதிவு செய்ய வேண்டும், இதில் போலீஸ் சரிபார்ப்பு மற்றும் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தல் ஆகியவை அடங்கும்.

2. டெலிகாம் ஆபரேட்டருக்கும் சிம் விற்பனையாளருக்கும் இடையே எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் கட்டாயமாக இருக்கும். இதில் வாடிக்கையாளர் பதிவு, செயல்படும் பகுதிகள் மற்றும் விதிமீறல்கள் ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளிடக்கியதாக இருக்கும்.

3. முறையான பதிவு இல்லாமல் சிம் கார்டுகளை விற்றால் ரூ.10 லட்சம் வரை அபராதமும், மூன்று ஆண்டுகளுக்கு தடுப்புப்பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

4. புதிய சிம் கார்டுகள் மற்றும் சிம் இடமாற்றம் ஆகிய இரண்டிற்கும் e-KYC (ஆதார் அடிப்படையிலான மின்னணு KYC) செயல்முறை தேவைப்படும்.

5. சிம் கார்டுகளை மொத்தமாக விற்பனை செய்வது இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வணிக பயனரும் தனிப்பட்ட KYC சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

4. துண்டிக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாட்கள் கடக்கும் வரை மீண்டும் ஒதுக்கப்படாது.

5. ஒரு தனிநபர் வைத்திருக்கக்கூடிய சிம் கார்டுகளின் அதிகபட்ச எண்ணிக்கை ஒன்பது ஆகும், இருப்பினும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில், இந்த வரம்பு ஆறாக அமைக்கப்பட்டுள்ளது.

6. 30 நாட்களுக்குச் செயலற்ற நிலையில் இருக்கும் சிம் கார்டுகளுக்கு வெளிச்செல்லும் சேவைகள் இடைநிறுத்தப்படலாம், மேலும் 45 நாட்களுக்குச் செயலற்ற நிலையில் இருந்தால், உள்வரும் சேவைகளும் தடுக்கப்படலாம்.

புதுப்பிக்கப்பட்ட விதிகள், போலி சிம் கார்டுகளால் எளிதாக்கப்படும் மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், பயனர் பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் மிகவும் வெளிப்படையான தொலைத்தொடர்பு அமைப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | Reliance Jio AirFiber... சிறப்பு சலுகையுடன்... குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News