ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஸ்மார்ட்போன் வியாபார யுக்தியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பிளாக்ஷிப் சாதனங்கள் மட்டுமின்றி நார்டு சீரிசில் பல்வேறு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புது ஸ்மார்ட்போன் விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்த பிராண்ட் உலகம் முழுவதும் பல நோர்ட்-சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் மூன்று இந்தியாவிற்கு வந்தன. அவைகள் OnePlus Nord, Nord CE 5G மற்றும் Nord 2 மாடல்கள் ஆகும். இவை அனைத்துமே ரூ.30,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறைந்த விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த காலாண்டு அல்லது 2022 இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது ரூ. 24,999 தொடக்க விலையில் நார்டு C.E. 5G ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கிறது. டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் அதன் அறிமுக காலவரிசை உத்தியில் "ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது" மற்றும் இந்தியாவில் ரூ.20,000 க்கு கீழ் சில ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிடபட்டுள்ளது.
சரியான வெளியீட்டு தேதி தெரியவில்லையென்றாலும் , ரூ.20,000 க்கு கீழ் உள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த காலாண்டில் அதாவது அக்டோபர் முதல் டிசம்பருக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.
ALSO READ 10 ஆயிரம் விலையில் Realme புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR