Tata Motors: கார்களின் விலையை அதிகரித்தது நிறுவனம், விவரம் இதோ

Tata Price Hike: டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அதன் அனைத்து கார்களின் விலையை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 23, 2022, 04:03 PM IST
  • டாடா மோட்டார்ஸ் கார்கள் விலை உயர்வு.
  • 1.1 சதவீதம் வரை அதிகரிப்பு .
  • மஹிந்திரா கார்களின் விலையும் அதிகரித்துள்ளது.

Trending Photos

Tata Motors: கார்களின் விலையை அதிகரித்தது நிறுவனம், விவரம் இதோ title=

டாடா மோட்டார்ஸ் விலை உயர்வு: பொதுவாக புத்தாண்டு தொடங்கும் போது, ​​இந்தியாவில் கார் உற்பத்தியாளர்கள் தங்கள் கார்களின் விலைகளை அதிகரிக்கத் தொடங்குகின்றனர். இது தவிர, புதிய நிதியாண்டின் தொடக்கத்திலும் வாகன உற்பத்தியாளர்கள் இதே அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள், இதற்கான ஒரு டிரெண்டை நிறுவனங்கள் இந்திய சந்தையில் உருவாக்கியுள்ளன. 

மாருதி சுசுகி, மஹிந்திரா, ஹோண்டாவைப் போல மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி மற்றும் வால்வோ போன்ற நிறுவனங்கள் ஏப்ரல் 2022 முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இப்போது டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அதன் அனைத்து கார்களின் விலையை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களைப் போலவே, டாடா நிறுவனமும் விலை உயர்வுக்கு மூலப் பொருட்களில் ஏற்பட்டுள்ள விலை உயர்வையே காரணமாகக் கூறியுள்ளது.

1.1 சதவீதம் வரை அதிகரிப்பு 

டாடா மோட்டார்ஸ் காரின் மாடல் மற்றும் வகையைப் பொறுத்து அனைத்து பயணிகள் வாகனங்களின் விலையையும் 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்நிறுவனம் இன்று முதல் இந்தியாவில் உயர்த்தப்பட்ட விலையை அமல்படுத்தியுள்ளது. தற்போது அனைத்து வாகனங்களின் மொத்த விலை உயர்வு குறித்த தகவலை அந்நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், மாடலுக்கு ஏற்ப எந்த காரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

மூலப் பொருட்களின் விலை உயர்வால், கார்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும், மொத்த உயர்வில் ஒரு சிறு பகுதி வாடிக்கையாளர்களுக்குச் சென்றுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது.

மேலும் படிக்க | BMW F 900 XR பைக் இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் 

1.3 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது

ஏப்ரலில் பல பெரிய வாகன உற்பத்தியாளர்களுக்குப் பிறகு, இப்போது நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியும் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஏப்ரல் 18, 2022 திங்கள் முதல் விலையை உயர்த்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 

அனைத்து கார்களின் விலையையும் 1.3 சதவீதம் உயர்த்துவது குறித்து மாருதி சுஸுகி தனது ஒழுங்குமுறை ஆவணத்தில் தகவல் அளித்துள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கத்தின் ஒரு சிறிய பகுதி வாடிக்கையாளர்கள் பக்கம் திரும்பியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா கார்களின் விலையும் அதிகரித்துள்ளது

மெர்சனிஸ்-பென்ஸ், ஆடி மற்றும் மாருதி சுசுகி போன்ற வாகன உற்பத்தியாளர்களைப் போல மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் தங்களது கார்களின் விலையை ரூ.10,000 முதல் 63,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்பு பல்வேறு மாதிரிகள் மற்றும் மாறுபாடுகளில் செய்யப்பட்டுள்ளது. 

மற்ற நிறுவனங்களைப் போலவே மூலப்பொருட்களின் விலை உயர்வும் கார்களின் விலை உயர்வுக்கு மிகப்பெரிய காரணம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. சந்தையில் ஸ்டீல், அலுமினியம், பல்லேடியம் மற்றும் பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

மேலும் படிக்க | மின்சார கார் வாங்கும் எண்ணம் இருக்கா? இந்த வங்கிகளில் சிறப்பு கடன்கள் சலுகைகள் உள்ளன 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News