ஸ்மார்ட்போன் கேமராவை பாதுக்காக்க சுலப வழிகள்! எதையெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

Smartphone Tips And Tricks To Safeguard Costly Phone : எதை செய்தால் கேமரா வீணாகும் என்பதைத் தெரிந்துக் கொண்டு, போனை பயன்படுத்தினால் போன் அருமையாக இருக்கும்... ஸ்மார்ட்போன் கேமராவை பாதுகாக்கும் சுலபமான டிப்ஸ் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2024, 01:54 PM IST
  • ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாய் பாதுகாக்க டிப்ஸ்
  • போனில் செய்யக்கூடாத தவறுகள்
  • நீண்ட நாள் போன் பாதுகாப்பாக இருக்க வழிகள்
ஸ்மார்ட்போன் கேமராவை பாதுக்காக்க சுலப வழிகள்! எதையெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா? title=

விலையுயர்ந்த போனை ஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு அதை பாதுகாப்பது தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டால், அது நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். போனின் கேமரா என்பது இன்று மிகவும் முக்கியமானது. ஸ்மார்ட்போன் வாங்கும்போது அதிலுள்ள அம்சங்களைப் பார்க்கும்போது, கேமராவின் தரத்தை பார்த்து தான் பலரும் அதனை வாங்குகின்றனர்.

நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலச்சூழலில் ஸ்மார்ட்போன்கள் பல கேமராக்களுடன் வருகின்றன. தரமான சிறந்த புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமல்ல, முக்கியமான ஆவணங்களை பிறருக்கு அனுப்பவும், போட்டோ எடுத்து பயன்படுத்துவது இன்றைய நாட்களில் அதிகமாகிவிட்டது. ஆனால் இந்த கேமராக்கள் மிகவும் நுட்பமானவை. இதில் அறியாமல் செய்யும் ஒரு தவறு கூட முழு கேமராவையும் சேதப்படுத்தும்.

எதை செய்தால் கேமரா வீணாகும் என்பதைத் தெரிந்துக் கொண்டு பயன்படுத்தினால் உங்கள் போன் நிரந்தரமாக நல்ல நிலையில் இருக்கும். அதற்கான சுலபமான டிப்ஸ்களைத் தெரிந்துக் கொள்வோம்.

வெப்பமும் வேண்டாம் குளிரும் வேண்டியதில்லை

அதிக வெப்பம் அல்லது குளிரில் ஸ்மார்ட்ஃபோன் கேமரா சேதமடையலாம். உதாரணமாக, சூரியன் தகிக்கும்போது அல்லது உச்சி வெயில் மண்டையை பிளக்கும் என்று சொல்லும் அளவுக்கு அதிக சூரிய ஒளி இருக்கும் சமயத்தில், சூரியனை கேமராவில் நீண்ட நேரம் கேமராவில் படம்பிடிப்பது தீங்கு விளைவிக்கும். ஆனால், அதுவே வெளிச்சமில்லா இரவு நேரத்தில் நிலவின் புகைப்படங்களை எடுக்கலாம். சில போன்களில் நிலவ்ஐ படம் எடுக்க சிறப்பு பயன்முறையும் உள்ளது.

மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!

லேசர் ஒளி காட்சிகளை படம் பிடிக்க வேண்டாம்

பிரகாசமான லேசர் விளக்குகளை உங்கள் கேமராவில் படம் பிடிப்பதைத் தவிர்க்கவும். பெரும்பாலும் கச்சேரிகள் போன்ற மேடை நிகழ்ச்சிகளில் லேசர் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் ஃபோனின் கேமரா மூலம் இந்த விளக்குகளைப் படம்பிடிப்பது உங்கள் கேமராவை நிரந்தரமாக சேதப்படுத்திவிடும். அதிகமான லேசர் ஒளி, லென்ஸ் மற்றும் சென்சார் இரண்டையும் சேதப்படுத்தும் என்பதால் அதனைத் தவிர்க்கவும்.

தண்ணீர் ஜாக்கிரதை

நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தங்கள் போனில் தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது என்றும், மழை பெய்துக் கொண்டிருக்கும்போதும் மொபைலில் பேசினால் போன் வீணாகாது என்று சொல்கின்றனர். ஆனால், அதுபோன்ற நவீன போன்கள் கூட மொபைலில் சிறிது தண்ணீர் பட்டால் பரவாயில்லை. ஆனால், பொதுவாக போனில் தண்ணீர் அதிகமாக பட்டால், மொபைல் போன் வெப்பமடையும். தண்ணீர் உள்ளே நுழைந்து கேமராவை சேதப்படுத்தும். எனவே தண்ணீரில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

லென்ஸ் பாதுகாப்பு

கேமராவில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ் ப்ரொடெக்டர் சரியாக நிறுவப்படாமல் இருந்தாலோ அல்லது தரம் குறைந்திருந்தாலோ, அது கேமராவையும் சேதப்படுத்தும். லென்ஸுக்கும் ப்ரொடெக்டர் இடையில் இடைவெளி இருந்தால், அதில் தூசி படிந்து, லென்ஸை சேதப்படுத்தும். எனவே, லென்ஸ் ப்ரொட்டெக்கரை கவனமாகப் பயன்படுத்துவது நல்லது.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பயன்படுத்துவதை தவிர்க்கவும்

பைக் அல்லது ஸ்கூட்டரில் ஸ்மார்ட்ஃபோனைப் பொருத்தி, அதனை பயன்படுத்துவது கேமராவுக்கு ஆபத்தானது. பைக் இயங்கும்போது வெளிப்புற சூழ்நிலைகளின் தாக்கம் கேமராவை சேதப்படுத்தும். பைக்கில் செல்லும்போது மொபைலை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், வாகனம் குலுங்குவதைத் தவிர்க்கசிறப்பு மவுண்டிங் கிட் பயன்படுத்துவது நல்லது.

ஸ்மார்ட்போன் கேமராவை பாதுகாக்க இதுபோன்ற எளிய மற்றும் சுலபமாக கடைபிடிக்கக்கூடிய உதவிக்குறிப்புகள் பயௌள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | ஸ்மார்டாய் ஸ்மார்ட்போன் வாங்க  பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயாரா? டாப் 7 5ஜி போன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News