இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்திய கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா 83 ரன்களும், முன்னாள் கேப்டன் டோனி 79 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணி உற்சாகத்தில் உள்ளது.
இரு கைகளையும் ஒப்பான திறனோடு பந்துவீசும் வீரர்கள் அரிதாக காணப்படும் நிலையில் இன்று நடைப்பெற்ற இந்தியா ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தினில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் இருகை பந்துவீச்சினை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள நேர்ந்தது.
அக்ஷ்ய கர்னிவார் என்ற சுழற்பந்து வீச்சாளர் இந்த செயலைச் செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இனையத்தில் வைராக பரவி வருகிறது
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் - ஆஸ்திரேலியா மோதும் பயிற்சி ஒருநாள் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.
முதல் ஒரு நாள் போட்டி வரும் செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கக்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின்ன் முதல் மூன்று போட்டிக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை தொடரில் இடம் பெறாமல் இருந்த யுவராஜ் சிங்க்கு, இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கு வேகபந்து வீச்சாளரான மொஹமத் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். குல்தீப் மற்றும் யூசுதேந்திர சஹால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சென்னை வந்தனர்.
இந்திய கிரிகெட் அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 T20 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிகெட் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 ஏ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஷ்வின் - ஜடேஜா முதலிடம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் அஷ்வின் முதலிடத்திலும் ஜடேஜா இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஜடேஜாவும் அஷ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா இடம்பிடித்துள்ளார்கள். இந்த சாதனையை எட்டிய வீரர் என்ற பெருமை அஷ்வின் மற்றும் ஜடேஜா பெறுவார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ரன் எடுத்து.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதமடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளதால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ரன் எடுத்து.
ஆஸ்திரேலியா மெல்போர்னியாவில் விமானம் வணிக வளாகத்தில் மோதி வெடித்து சிதறியதில் 5 பேர் பலியானார்.
மெல்போர்னில் உள்ள எசண்டன் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இரண்டு இன்ஜின்கள் கொண்ட பீச்கிராப்ட் சூப்பர் கிங் என்ற சிறிய விமானம் கிளம்பியவுடன், விமான நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் மீது மோதி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் பலியானார்கள். மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.
வணிக வளாகத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.வருகிற 17-ம் தேதி மும்பையில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணி பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி நேற்று மும்பை வந்தது. தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலிய அணியினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்., 23-ம் தேதி
2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ம் தேதி
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் வார்னர்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர் மற்றும் ரென்ஷா இருவரும் களமிறங்கினர். தொடக்க முதலே அடித்து ஆடினர். முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து வார்னர் அசத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது
ஹோபர்ட்டில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 161 ரன்னில் மீண்டும் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.