சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜிங் பிராந்திய பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 5.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலக்கடுத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக பதிவானது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர்.
சீனாவின் சுரங்கப்பாதையில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கிழக்குப்பகுதியில் உள்ள குயிங்டோவில் நகரில் இன்று பள்ளிப்பேருந்து ஒன்று சுரங்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாங்டங் மாகாணத்தின் வெய்ஹாய் என்னும் இடத்தில் தங்கி படித்துவந்த அந்த குழந்தைகள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு வயது நான்கு முதல் ஏழு வரை மட்டுமே என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம் குழந்கைகளுக்கு 12 பெயர்களை வைக்க சீன அரசு தடை விதித்துள்ளது.
சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். சீன அரசின் புதிய சட்டத்தின்படி முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது, தொழுகை நடத்தக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
தலாய் லாமாவின் இந்திய வருகைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்துள்ளது.
இந்திய-சீன எல்லையில் உள்ள 3488 கி.மீ., தூரம் வரையிலான பகுதியை 1962 போரின் போது சீனா கைப்பற்றியது. இந்தியாவால் அருணாச்சல பிரதேசம் என அழைப்படும் பகுதியை சீனா தெற்கு திபெத் என்றே அழைத்து வருகிறது.
“சீனாவுக்கு எதிராக, இந்தியா என்னை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை” என, திபெத்தை சேர்ந்த, புத்த மதத் தலைவர் ‘தலாய் லாமா’ கூறியுள்ளார்
இந்தியாவின் மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அருணாச்சல பிரதேசத்துக்குள் அனுமதிக்ககூடாது என இந்தியா வுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது.
அருணாச்சல பிரதேசத்தை ஓட்டியுள்ள எல்லை வரையறை தொடர்பாகவே இரு நாட்டுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருவதாகவும், இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக சீனா உரிமை கோர முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்று பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்தவர்கள் பட்டியலில் சேர்க்க இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என கடற்படையின் தளபதி அட்மிரல் கூறியுள்ளார்.
அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பகுதி தளபதி அட்மிரல் ஹரி ஹாரிஸ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுப் பயன்பாட்டுக்கு உரிய ஒரு பகுதி ஒருதலைப்பட்சமாக மூடப்படுவதை அனுமதிக்கமுடியாது. அங்கு எத்தனை ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் மாற்றமில்லை. தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என அவர் கூறினார்.
பெண்களுக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்திய-சீன படைகள் நேருக்குநேர் அணி திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லடாக் டிவிஷன், சீன எல்லை ஓரம் அமைந்துள்ளது. அங்குள்ள சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 14 பேர் பலியாகினர் மேலும் 145 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஷான்ஜி மாகாணாம் ஜின்மின் நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குண்டு வெடித்தது. அதன் அருகில் உள்ள கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தருவதையடுத்து அணுசக்தி பொருள் விநியோக நாடுகளில் இந்தியா உறுப்பினராகச் சேர பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று கூறியுள்ளது சீனா.ஆனால், ஜெய்ஷ்-இ-மொகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாருக்கு ஐநா தடை கோரும் விவாரத்தில் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடும் என்று கூறியுள்ளது. காரணம் ‘பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் எந்த ஒருநாடும் அரசியல் லாபங்களைப் பெறுதல் கூடாது” என்று கூறுகிறது சீனா.
காஷ்மீர் விவகாரத்தில் தங்களை சீனா ஆதரிப்பதாக பாகிஸ்தான் கூறியதை சீனா மறுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது வெளிநாடுகள் கண்டனம் தெரிவித்தால், அப்போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும். ஆயுதம் ஏந்தாத மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. காஷ்மீர் மாநில மக்களின் விருப்பப்படி தீர்வு காண வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் யு போரென் கூறியதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதனை சீனா மறுத்துள்ளது.
4 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். முதலில் வியட்நாம் செல்லுகிறார், அந்த நாட்டுடன் ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளில் உறவை வலுப்படுத்துவது பற்றி அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.