தேசிய கீதத்தை அவமதித்தால் 3 வருடம் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை சீனா அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது.
ஏற்கனவே சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 15 நாட்கள் சிறையில் தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சீனா அரசு இது சம்பந்தமான வரைவு மசோத ஒன்றை, அந்நாட்டு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா ஜெய்ண்ட் பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெற்றிகரமாக 42 பாண்டா குட்டிகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 36 பாண்டாக்கள் 2017-ஆம் ஆண்டில் பிறந்தவை ஆகும்.
ஒரே ஆண்டில் 36 குட்டிகளை இனப்பெருக்கம் செய்தது அம்மையத்தின் வரலாற்றுச் சாதனையாகும்.
Cute alert! 36 baby pandas born in 2017 made their big debut on Friday at two breeding centers in SW China’s Sichuan pic.twitter.com/uZ0jjN64M3
சீனாவில் ஒரு சில சமுக வலைத்தளங்களை பயன்பதுத்த மகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றே தற்போது வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்சமய தகவலின் படி சீன அரசாங்கம் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதித்துள்ளது என்றும் சீனா முழுக்க வாட்ஸ் அப் சேவை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் சீனா முழுக்க பலமுறை வாட்ஸ் அப் பயன்பாடு தடைப்பட்டது. வாடிக்கையாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது.
ஐ.நா.,வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா திமிரோடு பேச்சு பேசியதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சமீபத்தில் ஐ.நா.,வில் பொது சபையில் பேசினார். அவர் பேசும் போது இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசினார். இந்தியா ஐ.டி., துறையில் உலகிற்கு சவால் விட்டு வருவதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு தலைமையிடமாக இருப்பதாவும், இந்தியாவில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், அறிஞர்களை உருவாக்கி அவர் கூறி இருந்தார்.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சீனாவில் நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.
2-வது நாளான நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாத குழுக்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதம் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இந்த அமைப்பு(‘பிரிக்ஸ்’ ) முடிவு செய்துள்ளன என பேசினார்.
சீனாவின் ஜியொமென் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு இன்று துவங்கி உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 9 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜுமா, பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை துவங்கிய மாநாட்டின் துவக்க விழாவில் மோடி பேசியது:-
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று சீனாவிற்கு பயணம் கொள்கிறார்.
இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு பிரிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஒவொரு ஆண்டும் நடைபெறும் இந்த அமைப்பின் மாநாடு, சீனாவின் சியாமென் நகரில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரகாசமான எதிர்காலத்திற்கான கூட்டணி என்ற முறையில் உலகளாவிய பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார்.
சீனாவின் குய்ஹோ மாகாணத்தில் கடுமையான மழை பெய்தததை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்ளூர் போலீஸ், தீயணைப்பு வீரர்கள், மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் உட்பட 2,800 பேருக்கு மேல், 110 அவசர வாகனங்களுடனும், 20 ஆய்வக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் எட்டு ட்ரோன்கள் ஆகியவற்றுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9_வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் அமைத்துள்ள ஜியாமென் நகரில் நடைபெறும்.
டோக்லாம் பிரச்சனை முடிவடைந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரா மோடி, சீனாவில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் 9_வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார் என வெளிவிவகார அமைச்சுகம் தெரிவித்துள்ளது.
இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன.
இந்தியா மற்றும் சீனா சிக்கிம் எல்லையிலிருந்து நிலைநிறுத்தப்பட்டிருந்த தங்களது படைகளை திரும்பபெற முடிவு செய்துள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ட்விட்டரில் இதுகுறித்து "இந்திய சீன எல்லையிலிருந்து நிலைநிறுத்தப்பட்டிருந்த தங்களது படைகளை திரும்பபெற முடிவு செய்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.
"சமீபத்திய காலமாக இந்தியாவும் சீனாவும் டோக்லாம் சம்பவத்தில் சர்ச்சையான கருதுக்களை கடைபிடித்து வந்தன. இந்நிலையில் தற்போது அதற்கான சசுமுகமான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், டோக்லாம் பூமி பகுதியில் நிலைமையை கைப்பற்றும் சீனாவின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிரிக்க கூடும் என நான் கருதுகிறேன்.
பாங்காக் நீதிமன்றம் முன்னாள் தாய்லாந் வர்த்தக மந்திரிக்கு இன்று 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தாய்லாந், சீனா அரசிற்கும் இடையே செய்யப்பட்ட அரிசி உடன்படிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர் போன்சோங்கிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்க எதிர்ப்பு ஆணையம் அறிவித்துள்ளதாவது, போன்சோங்ன் ஒப்பந்தங்களால் மாநிலத்திற்கு "பெரும் இழப்புக்களை" ஏற்படுட்டுள்ளன, அத்துடன் அரிசி உள்நாட்டில் மட்டும் விற்கப்பட்டது, ஏற்றுமதி செய்யப்படவில்லை என யிங்லகின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு படைகள் நாட்டின் பிராந்தியங்களை தைரியமாக பாதுகாக்க முடியும் என்று உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நமது பாதுகாப்புப் படைகள் இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்கான அனைத்து சக்தியையும் கொண்டுள்ளன என்றும், குளிராக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் நமது வீரர்கள் சோர்வடைவதில்லை. நமிடம் அத்தகைய தைரியமான துணிச்சலான வீரர்கள் உள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதியான லஷ்கர் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரியின் கரையோரத்தில் இந்திய எல்லையில் நுழைவதற்கு சீனப் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய மற்றும் சீனாவின் இராணுவ அதிகாரிகள் புஷ்ஷின் லெபியின் சுஷ்லுல் பகுதியில் ஒரு கூட்டத்தை நடத்துகின்றனர்.
சீன-இந்தியா எல்லையுடனான சமாதானத்தையும் அமைதியையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் உள்ள விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களால் இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதை குறித்து விசாரணை நடக்கிறது.
இந்தியா - சீனா இடையேயான பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால் இந்திய பயணியர் ஒருவர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆய்த சோதனைகளை நடத்தி வருகிறது. சோதனைகளை பல நாடுகள் அந்நாட்டு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு சீனா மற்றும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த வலுவான பொருளாதார தடை தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த செயல் மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பூடான் எல்லை டோக்லாம் பகுதியை ஒட்டி வசிக்கும் இந்திய கிராம மக்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோக்லாம் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இது குறித்து இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 50 நாள்கள் ஆன நிலையில், இந்தியாவுக்கு சீன ஊடகங்கம் எச்சரிக்கை விடுத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எந்நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் டோக்லாம் எல்லையை ஒட்டியுள்ள நதாங் கிராமத்தில் வசிக்கும் இந்திய மக்களை உடனடியாக வெளியேறும்படி ரானுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான போருக்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதாக சீன ஊடகங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இது குறித்து இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 50 நாள்கள் ஆன நிலையில், இந்தியாவுக்கு சீன ஊடகங்கம் எச்சரிக்கை விடுத்து கருத்து தெரிவித்துள்ளது. டோக்லாம் பகுதியிலிருந்து தங்களின் படைகளை இந்தியா திரும்பப் பெறாதவரை, இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.