தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர்:-
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற நாளிலிருந்தே, ஓபிஎஸ் அணியினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இதற்கு, எடப்பாடி அணியில் உள்ள சில எம்எல்ஏக்களும் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி அணியையும், ஓபிஎஸ் அணியையும் இணைக்கும் முயற்சி நடைபெற்றது.
சென்னை வடபழனியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகினர்.
வடபழனி தெற்கு பெருமாள் வீதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்த மின்சாரப் பெட்டி மூலம் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த புகைமூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குக் கூடுகிறது.
இந்த கூடத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. துறை ரீதியாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்குக் கூடுகிறது.
இந்த கூடத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. துறை ரீதியாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
டெல்லியில் கடந்த 41வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்துள்ளார்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.