BJP 400 Seat Target: ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ந்து பாஜக இலக்காகக் கொண்டிருக்கிறது.
KP Ramalingam: கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கும் 39 இடங்களிலும் திமுக தோல்வியடையும் என பாஜக தெரிவித்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளார்கள். ஜாபர் சாதிக் திராவிட முன்னேற்றக் கழகம் தானே என விமர்சனம் செய்த குஷ்பூ, என்னை பார்த்து ஏன் பயப்படுறீங்க என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
Actor Sarathkumar Join BJP Alliance : நடிகர் சரத்குமார் திடீரென சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்திருக்கும் நிலையில், அதன் பின்னணியில் மகள் வரலட்சுமி சரத்குமாரின் என்ஐஏ வழக்கு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Citizenship Amendment Act: இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் CAA -வில் அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை.
Citizenship Amendment Act : CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுவதாக நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பதாக சவால் விடும் அர்ஜூன் சம்பத்...
CM Stalin Condemns CAA Implementation: குடியுரிமை திருத்தச் சட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பின் இன்று அமல்படுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.
கோவையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில், பாஜகவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி இல்லாத காரணத்தால், திமுகவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு உறுதி என ஆணித்தரமாக கூறிய நிலையில், அங்கிருந்த அர்ஜூன் சம்பவம் நைசாக நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Former Minister Ponmudi Case: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு கால சிறை தண்டனையை நிறத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அவரது மனைவிக்கும் பொருந்தும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே இனம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, ஒரே தேர்தல் ஆணையரை வைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்வார் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன் என குஷ்பு பேசி உள்ளார்.
Thanjavur Natyanjali Ceremony: தஞ்சாவூரில் நாட்டியாஞ்சலி விழா இந்தாண்டு நடைபெறாததற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என அண்ணாமலை கூறிய நிலையில், அத்தகவல் வதந்தி என தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழாவில், 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் தங்களை பாஜக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
Jaffer Sadiq Issue: ஜாபர் சாதிக்கிற்காக வழக்கினை நடத்தியவர் பாரதிய ஜனதா கட்சியினுடைய வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
தோல்வி பயம் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக எல் முருகன் விமர்சித்துள்ளார். உதகையில் பேட்டியளித்த அவர், என் மண் என் மக்கள் யாத்திரையானது தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீலகிரியில் தான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.