ஆளும் அரசின் நவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் அடையாள வெளிநடப்பு செய்தோம். உடனே திமுக வெளிநடப்பு செய்தது எனக் கொட்டை எழுத்துக்களில் செய்தி போடவேண்டாம். அதேநேரத்தில் திமுக எதற்காக வெளிநடப்பு செய்தது எனப் பதிவிடுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் CAA, NPR மற்றும் NRC பற்றி தவறான மற்றும் மோசமான கருத்துகள் பரப்புவதாக 150 க்கும் மேற்பட்ட நாட்டின் முக்கிய குடிமக்கள் ஜனாதிபதி கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சு வாரத்தை நடத்த மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மான அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ரஜினி இன்னும் ஒரு நடிகராக இருப்பதால், அவருக்கு அரசியல் புரியவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு, நான் அவருக்கு பதிலளிப்பேன் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தெளிவாகவும் திடமாகவும் இருந்த மாணவர்களால் தான் மொழிப்போர் வென்றது. உங்கள் பசப்பு நாடகத்தை முடிக்கப் போகிறீர்களா? அல்லது நடிப்பைத் தொடரப் போகிறீர்களா? என ரஜினிகாந்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல் முறையாக, மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனக் கூறி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை மத்திய பிரதேச அரசு நிறைவேற்றியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.