எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவு 100க்குள் தான் இருக்க வேண்டும், அதன் அளவு 130க்கு மேல் இருந்தால் இதயம் சம்மந்தப்பட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
இதயத்திலிருந்து முழு உடலுக்கும் ரத்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் இதயத்துக்கு அனுப்புவதே நமது தமனிகளின் செயல்பாடு. ஆனால் ரத்தக் குழாய்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், அதில்அடைப்பு ஏற்படுகிறது.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. இதனால், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் இந்த பிரச்சனைகளுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு தான் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் நமக்குத் தொல்லைகளை ஏற்படுத்தலாம், ஆனால் சில பிரத்யேக சூப்பர்ஃபுட்களை சாப்பிடுவதன் மூலம், இந்தப் பிரச்சனையை எளிதில் சமாளிக்கலாம்.
உடலில் அதிக கொலஸ்ட்ரால் ஒரு தீவிர பிரச்சனையாகும், இது பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. இது மாரடைப்பு முதல் மூளை பாதிப்பு வரை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத ஆரம்ப அறிகுறிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Tips to Reduce High Cholesterol: உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது உடலுக்கு நல்லதாக கருதப்படுவதில்லை. கொழுப்பு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கும் இது வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்துகளை சிலர் எடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். நல்ல கொலஸ்ட்ரால் எச்டிஎல் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் எல்டிஎல் கொலஸ்ட்ரால் எனப்படும். கெட்ட கொலஸ்ட்ரால் எல்டிஎல் நம் உடலில் அதிகமாக இருந்தால், இதய நோய், பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடும். எச்டிஎல் இரத்த நாளங்களில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. எனவே உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உங்கள் உணவு முறையை மாற்றிக்கொள்ளுங்கள்.
High Cholesterol: பொதுவாக கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுவதில்லை. ஆனால் இது ஒரு தவறான கருத்து. கொலஸ்ட்ரால் ஹார்மோன்களை உருவாக்குதல் மற்றும் உணவை ஜீரணிப்பது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். அதிக கொலஸ்ட்ரால் உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ராலின் சரியான அளவு ஒரு நபரின் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தது. பெரும்பாலான மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாததால் சில தவறான உணவுகளை உட்கொள்கிறார்கள். இவை கொலஸ்ட்ராலை அதிகரித்து, அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது.
உடலில் 70 சதவீதம் தண்ணீர். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். சில வகையான பொருட்களைச் சேர்த்தால் தயாரிக்கும் அற்புதமான பானங்களால், கொலஸ்டிரால், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் மட்டுமின்றி, பல வித உடல் பிரச்சனைகளை தீரும்.
தற்போதைய வாழ்க்கைமுறை காரணமாக மக்கள் கொலஸ்ட்ராலால் சிரமப்படுகின்றனர். அதிகரித்த கொலஸ்ட்ரால் இதய பிரச்சனைகளை உண்டாக்கும். அத்தகைய சூழ்நிலையில், உலர்ந்த பழங்களை உட்கொள்வது நன்மை பயக்கும்.
கொலஸ்ட்ரால் உங்கள் உடலை பலவீனப்படுத்துகிறது. மேலும் பல நோய்களுக்கு இலக்காகிறது. உண்மையில், கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் காணப்படும் ஒரு ஒட்டும் பொருளாகும். இது இரண்டு வகை ஆகும். முதலாவது எச்.டி.எல் அதாவது நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரண்டாவது கெட்ட கொழுப்பு, எல்.டி.எல் என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எல்.டி.எல் அளவு 200 mg/dL ஐ தாண்டும்போது ஒரு அமைதியான கொலையாளியாக செயல்படுகிறது. இது எந்த குறிப்பிட்ட அறிகுறிகளையும் காட்டாது. ஆனால் இதனால் பக்கவாதம் அல்லது இதய நோய் ஏற்படலாம்.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து உங்களை காத்துக் கொள்ளவும், நோய் இருந்தால், மருந்துகள் இல்லாமல் கூட சமாளிக்கவும், சில விஷயங்களை பழக்கமாக்கிக் கொள்வது பயனளிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.