LGBTQ சமூகத்தின் 1,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களுடன் இந்தியாவின் பாலியல் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்காக புதுடெல்லியில் அணிவகுப்பு நடத்தினர்.
பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வின் முதல் நாளில் அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவதற்கான மசோதாவை பாஜக பட்டியலிடவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது, மேலும் ஆளும் கட்சியின் பொய்கள் இதன்மூலம் பிடிபட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
மாநிலத்தில் மாசுவினை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், 15 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட அரசு, வணிக வாகனங்களை தடை செய்வதாக பிகார் அரசாங்கம் அறிவித்துள்ளது!
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (05.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் (Tis Hazari court) வக்கீல்களுக்கும் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வக்கீல்கள் இன்று வேலைநிறுத்த போரட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற டெல்லி காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வன்முறை மோதல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் கூட்டு போலீஸ் கமிஷனர் (Jt. CP) தலைமையில் ஒரு SIT அமைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.