இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, பெயரைச் சூட்டிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆணவப் படுகொலை அதிகரித்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவரே தெரிவித்துள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஒரு புள்ளியை வைத்துக்கொண்டு கோலம் போட முடியாது என்றும், நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கனவு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வீட்டு வரி, சொத்து வரி ஆகியவற்றைத் தொடர்ந்து காய்கறி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள், ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், களப் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகப் பதவியேற்பதை ஒட்டி தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சத்தீவை திமுக தாரை வார்த்ததாகக் கூறுவது தவறு என்றும், கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜி-20 மாநாடு குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் கோட் சூட் சகிதம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் முதலீட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.