இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கோவாக்ஸினுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Virus பல்வேறு உருமாற்றங்களை எடுத்து உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், அடுத்ததாக மியு (MU) B.1.621 என்ற உருமாற்றம் அடைந்துள்ளதாகவும், தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது...
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதனை சந்தித்து கோவாக்ஸினுக்கான அங்கீகாரம் குறித்து ஆலோசனை செய்தார்
கொரோனா தொற்று கவலையளிப்பது ஒருபுறம் என்றால், பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பின் விளைவுகள் மிகவும் கவலையளிப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது
நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்ப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்கும்...
மதிப்பீடுகளின்படி சுமார் 100 நாடுகளில் COVID-19 இன் டெல்டா மாறுபாடு இருப்பதைக் குறிப்பிட்டு, உலக சுகாதார அமைப்பு அதிக அளவில் பரவக்கூடிய இந்த திரிபு வரவிருக்கும் மாதங்களில் உலகளவில், கொரோனா வைரஸின் மிக அதிக ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என்று எச்சரித்தது.
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து உருவாக்கிய mYoga app செயலி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி அமர்வுகளை தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குகிறது
கொரோனா தொற்று நெருக்கடி கால கட்டத்தில், மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க விரும்பினால், உங்கள் அன்றாட வழக்கத்தை எப்போதும் போல் பின்பற்றுங்கள் என WHO அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கலாம். இந்த தகவலை அளித்த, உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகம் முழுவதும் இது பற்றிய ஆராய்ச்சி நடந்து வருவதாகக் கூறியது.
அவசரகால பயன்பாட்டு பட்டியலில் (EUL) சேர்க்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியலை WHO தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் பிற நாடுகளுக்குச் செல்ல தகுதியுடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்பது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் உலக சுகாதார நிறுவனம், தனது வரைவு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், SARS-CoV-2 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளின் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் நான்கு சாத்தியக்கூறுகளை பட்டியலிட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக AstraZeneca இன் கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு ஜனாதிபதி (Emmanuel Macron) இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.