ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் கரகோட்டா எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சிக்கி 222 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் சுமந்தா ஸ்ட்ரெயிட் பகுதியில் உள்ள கரகோட்டா எரிமலை, கடந்த ஜூலை மாதம் முதல் எரிமலை குழப்பினை கக்கிவருகிறது. தற்போது அதன் உக்கிரம் அதிகரித்துள்ளது.
சுமந்தா ஸ்ட்ரெயிட் பகுதி, இந்திய பெருங்கடலின் ஜாவா கடற்பரப்பில், ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதியாக உள்ளது.
Breaking Video: Tsunami wave crashes into a venue while a band performs in Indonesia. pic.twitter.com/KqLepLbRHI
— PM Breaking News (@PMBreakingNews) December 23, 2018
இந்த பகுதியில் கொந்தளித்து வந்துகொண்டிருந்த கரகோட்டா எரிமலை தற்போது வெடிக்கத் துவங்கியு்ளதை அடுத்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, சுனாமி ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சுனாமியில் சிக்கி இதுவரை 222 பேர் பலியாகியுள்ளதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலியானவர்களில் பெரும்பாலானோர் பாண்டேக்லாங், தெற்கு லாம்புங் மற்றும் ஷெராங் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது