அமெரிக்காவில் மற்றொரு George Floyd சம்பவம்; வீதியில் போராடும் மக்கள்

அமெரிக்காவில் மற்றொரு ஜார்ஜ் ஃபிலாய்ட் சம்பவம் நடந்துள்ளது.  காவல்துறையினர் கறுப்பின இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றதை அடுத்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது

Last Updated : Apr 13, 2021, 04:59 PM IST
  • Black Lives Matter என்ற போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
  • ஞாயிற்றுக்கிழமை, காவல்துறையினர் கருப்பின இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றனர்
  • டவுண்டி ரைட் என்ற அந்த நபர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவில் மற்றொரு George Floyd சம்பவம்; வீதியில் போராடும் மக்கள்  title=

அமெரிக்காவில் (America) மீண்டும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில், கறுப்பின இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் பல இடங்களில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. காவல்துறையினர் வேண்டுமென்றே 20 வயது டவுண்டி ரைட் (Daunte Wright) என்ற அந்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு அமெரிக்க காவல்துறை ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd ) என்பவரை  சுட்டுக் கொன்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.  Black Lives Matter என்ற போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு அமெரிக்காவில் பெரிய அளவில் வன்முறைகள் நடந்தன. இப்போது மீண்டும் அதே போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

கடந்த ஆண்டு ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள இடத்தில்,  20 வயதான டவுன்டி ரைட் என்பவர் ஞாயிற்றுக்கிழமை காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது, அவரது மற்றொரு கார் மோதியதாகவும், சம்பவ இடத்தை அடைந்து போலீஸார்,  அவரை  சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. 

ALSO READ | ”வாலை” நறுக்கினால் மட்டுமே வாழலாம்; கர்ப்பம் தரிக்கவும் கடுமையான கட்டுப்பாடு

இறந்தவரின் தாயார், டவுண்டியின் நண்பர் தன்னை தொலைபேசியில் அழைத்து, டவுண்டி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் அளித்ததாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், மக்கள் அதிக அளவில் கூடினர்.  அதே நேரத்தில், இறந்தவரின் தாய் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகன் ஏன் தேவையில்லாமல் கொல்லப்பட்டான் என்ற உண்மையான கேள்விக்கான பதில் கிடைப்பதற்கு வன்முறை தடையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

டவுன்டி ரைட் இறந்த பின்னர், போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டின் பேரில் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றபோது, ​​அவர் ஓட முயன்றதாகவும், அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தார் எனவும் கூறப்படுகிறது

டவுன்டி ரைட்டின் மரணத்திற்குப் பிறகு, புரூக்ளின் மைய காவல் துறை அலுவலத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மறுபுறம், போராட்டக்காரர்களை விரட்ட காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

ALSO READ | Fukushima அணு உலை கழிவு நீரை கடலில் விட ஜப்பான் முடிவு; எதிர்க்கும் உலக நாடுகள் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News