பல நாடுகள் உறுப்பினராக உள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை. கிட்டத்தட்ட 193 நாடுகள் என உலகின் அனைத்து நாடுகளும் முக்கிய நாடுகளும் இதில் உறுப்பினராக உள்ளனர். ஐ.நா. அமைப்பின் முதன்மையான கலந்தாராய்வு சபை பொதுச்சபை ஆகும். இந்த சபைக்கு பொது செயலாளராக பதவி வகிப்பவர் முக்கிய நபராக கருதப்படுவார்கள்.
அந்தவகையில் ஐ.நா. சபையின் ஏழாவது பொதுச்செயலாளராக கோஃபி அன்னான் பதவியேற்றார். இந்த பதவியில் அமர்ந்த முதல் கறுப்பின நபர் ஆவார். 1997 ஆம் ஆண்டு ஜனவரி முதல், இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை பதவி வகித்தார். இவர் இரண்டு முறை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு கோபி அன்னாவுக்கு வழங்கப்பட்டது. முதிர் வயது காரணமாக உடல்நலக் குறைவால் இருந்த கோஃபி அன்னான், இன்று தனது 80 வயதில் காலமானார்.