மாஸ்கோ: 2020 ரஷ்யாவின் வெற்றி (Russia Victory Day Parade) தின அணிவகுப்பு இந்த முறை மிகவும் சிறப்பு வாய்ந்தாக அமைந்துள்ளது. ஏனெனில் இது இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் தியாகம் மற்றும் நேச நாடுகளின் வெற்றியின் அடையாளமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போரில் (World War II) ரஷ்யா பெற்ற வெற்றியின் அடையாளமாக இந்த ஆண்டு வெற்றி விழா அணிவகுப்பில் இந்திய ராணுவத்துடன் சேர்த்து மேலும் 11 நாடுகளின் படைகளும் பங்கேற்றன. நமது நாட்டின் இராணுவம் படை, விமானப்படை மற்றும் கடற்படை என மூன்று படைகளை சேர்ந்த வீரர்கள் வெற்றி விழாவில் இணைந்துள்ளனர்.
ரஷ்யாவின் (Russia) தலைநகரான மாஸ்கோவில் உள்ள சிவப்பு சதுக்கத்தில் வெற்றி நாள் அணிவகுப்பு நடைபெற்றது. 1945 இல் இந்த நாளில், ரஷ்யா ஜெர்மனியை தோற்கடித்து ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இது வெற்றியின் 75 ஆம் ஆண்டு விழா ஆகும்.
READ | இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா?
இந்த அணிவகுப்பில் இந்திய இராணுவத்தின் பங்கேற்பு என்பது, இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யா செய்த மிகப்பெரிய தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், இரண்டாம் உலகப் போரின்போது தியாகியாக இருந்த இந்திய வீரர்களுக்கும் (Indian Soldiers) மரியாதை செலுத்தும் அணிவகுப்பாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, இந்தியா பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. எனவே, நாஜி ஜெர்மனிக்கு எதிரான போரில் இந்திய வீரர்களும் ஈடுபட்டனர். சுமார் 20 லட்சம் இந்திய வீரர்கள் இந்த போரில் பங்கேற்றனர்.
இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் (Rajnath Singh) சீனாவின் வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க மாஸ்கோ சென்றுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுடன் எல்லை தகராறு நடந்து கொண்டிருக்கும் போது இந்திய இராணுவம் வெற்றி விழா அணிவகுப்பில் இணைந்திருப்பது உலக நாடுகளிடைய பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ரஷ்யா இந்தியாவின் பழைய நட்பு நாடு ஆகும். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் ரஷ்யா உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இந்த அணிவகுப்பில் இந்தியாவின் (India) பங்கேற்பு மிக முக்கியமானது. இந்த அணிவகுப்பில் 75 ராணுவ வீரர்களும் இந்திய ராணுவ அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
READ | சீன வீரர்கள் 99 நொடிகளில் செய்ததை இந்திய வீரர்கள் 26 நொடிகளில் சாதித்தனர்
இந்த அணிவகுப்பில் இந்தியாவைத் தவிர 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த நாடுகள் அனைத்தும் இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவுடன் நின்று ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்டன. இந்த உலகப் போர் 1939 இல் தொடங்கி 1945 இல் ஜெர்மனியின் தோல்விக்குப் பின்னர் முடிந்தது. இந்த போரில் நேச நாடுகள் வென்றன. ஆனால் இந்த போரில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டதால் சேதம் அதிகமாக இருந்தது.