அதிபர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரா முர்சாவிற்கு 25 ஆண்டுகள் சிறை!

ராஷ்யாவில் காரா-முர்சா ஒரு முக்கிய எதிர்க்கட்சி ஆர்வலர். இவரை போலவே அலெக்ஸி நவல்னி என்ற நபர் ரஷ்ய அதிபரை விமர்சித்த நிலையில், அவருக்கு பலமுறை விஷம் கொடுக்கப்பட்டது. அவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2023, 07:59 PM IST
  • மாஸ்கோ நீதிமன்றம் காரா முர்சா தேசத்துரோகம் மற்றும் இராணுவத்தை அவதூறு செய்ததாக தீர்ப்பளித்தது.
  • புட்டினின் தீவிர எதிர்ப்பாளர் முர்சாவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • முர்சா தனது வழக்கை 1930களில் ஜோசப் ஸ்டாலினின் விசாரணையுடன் ஒப்பிடுகிறார்.
அதிபர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரா முர்சாவிற்கு 25 ஆண்டுகள் சிறை! title=

மாஸ்கோ: தேசத்துரோகம் மற்றும் ரஷ்ய இராணுவத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டின் கீழ் கிரெம்ளின் எதிர்ப்பாளர் மீது மாஸ்கோ நீதிமன்றம் திங்களன்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. விளாடிமிர் காரா-முர்சா ஒரு முக்கிய எதிர்க்கட்சி ஆர்வலர். இரண்டு முறை விஷம் குடித்து உயிர் பிழைத்தார். இதற்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். காரா-முர்சா ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையில் உள்ளார். இவரை போலவே அலெக்ஸி நவல்னி என்ற நபர் ரஷ்ய அதிபரை விமர்சித்த நிலையில், அவருக்கு பலமுறை விஷம் கொடுக்கப்பட்டது. அவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார். காரா முர்சா தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காழ்புணர்ச்சி என்று நிராகரித்தார் மற்றும் சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் போது நடந்த நீதித்துறை நடவடிக்கைகளை போல் உள்ளது என்று இந்த வழக்கை ஒப்பிட்டார்.

ரஷ்யாவிற்கு எதிரான கருத்து

மார்ச் 15 அன்று அரிசோனா பிரதிநிதிகள் சபையில் காரா-முர்சா ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்தார். இந்த பேச்சுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர் காவலில் இருந்தபோது புலனாய்வாளர்கள் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளைச் சேர்த்தனர். பிப்ரவரி 24, 2022 அன்று, உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பிய உடனேயே, ரஷ்யா தனது இராணுவத்தைப் பற்றிய 'தவறான தகவல்களை' பரப்புவதை குற்றமாக்கும் சட்டத்தை இயற்றியது. ரஷ்ய அரசாங்கம் உக்ரைன் மீதான ஒடுக்குமுறையை "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று கூறுகிறது.  ரஷ்யா மீதான விமர்சனங்களை ஒடுக்க, அதிகாரிகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | NATOவுக்கு எதிராக கை கோர்க்கும் சீனா - ரஷ்யா! அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருமா!

பத்திரிகையாளராக பணியாற்றும் காராமுர்சா

காரா-முர்சா, 41 வயது, மூன்று குழந்தைகளின் தந்தை மற்றும் தொழில் ரீதியாக ஒரு பத்திரிகையாளராக இருந்து வருகிறார். அவர் ரஷ்ய மற்றும் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்களை வைத்திருக்கிறார். ஒரு அரசியல்வாதியாக, முர்சா நீண்ட காலமாக அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளராக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.  மனித உரிமை மீறல்களுக்காக பல ரஷ்ய அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க முர்சா வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களை வற்புறுத்தி வருகிறார்.

ஜோசப் ஸ்டாலினுடன் ஒப்பீடு

நீதிமன்றத்தில் தனது இறுதி உரையில், காரா-முர்சா தனது வழக்கை 1930 களில் ஜோசப் ஸ்டாலினின் விசாரணையுடன் ஒப்பிட்டார். அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்திடம் கேட்க மறுத்து விட்டார். தான் கூறியதை எண்ணி பெருமிதம் கொள்வதாக கூறினார். குற்றவாளிகள் தங்கள் செயலுக்காக வருந்த வேண்டும் என்றார். எனது அரசியல் கருத்துகளுக்காக நான் சிறையில் இருக்கிறேன். நம் நாட்டை விட்டு இருள் விலகும் நாள் நிச்சயம் வரும் என்பதும் எனக்கு தெரியும்.

மேலும் படிக்க | சீனா - ரஷ்யா வேண்டாம்... எங்க டீமில் சேருங்க... இந்தியாவிடம் அமெரிக்கா MP கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News