பத்து நாட்களுக்குள் வடகொரியா ஐந்து ஏவுகணை பரிசோதனைகள் நடத்தியுள்ளது. இன்று மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்துள்ளது, கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சியோலுக்கு ராஜாங்கரீதியிலான பயணத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மேற்கொள்வதற்கு முன்னதாகவும் வடகொரிய ஒரு ஏவுகணையை சுட்டு பரிசோதித்தது. தென் கொரியாவுக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர், வடகொரியாவுடனான மோதலில் தென் கொரியாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, தங்களது முதல் கூட்டு கடற்படை பயிற்சியை கொரிய தீபகற்பத்தில் தொடங்கின. வட கொரிய தாக்குதல் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும், தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வலுவான கூட்டணியை நிரூபிக்கவும் இந்த கூட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது என்று தென்கொரிய கடற்படை பகிரங்கமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!
தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் மற்றும் ஜப்பானிய கடலோரக் காவல்படையின் கூற்றுப்படி, வட கொரியா, இன்று அதிகாலையில் அதன் கிழக்கு கடற்கரையில் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது.
விமானம் தாங்கி போர் கப்பலை கொரிய தீபகற்பத்திற்கு கொண்டு வந்து தென் கொரியாவுடன் இணைந்து இராணுவ ஒத்திகையை நடத்திவரும் அமெரிக்காவுக்கு வடகொரியா விடுக்கும் எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
"வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை கிழக்கு நோக்கி சுட்டு பரிசோதித்தது" என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!
இந்த ஏவுகணை பரிசோதனை தொடர்பான விவரங்கள் தெரியவில்லை என்றாலும், ஜப்பானிய கடலோரக் காவல்படையும் ஏவுதலை உறுதிப்படுத்தியது,அதோடு, சுற்றியுள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்கும்படி கடற்படைக் கப்பல்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதோடு, சில குடியிருப்புகளை காலி செய்யவும் ஜப்பான் அரசு உத்தரவிட்டது.
"வட கொரியா ஒரு ஏவுகணையை ஏவியதாக சந்தேகம் எழுந்துள்ளது.எனவே, தயவுசெய்து கட்டிடங்கள் மற்றும் நிலத்தடியில் இருப்பவர்கள் வெளியேறுங்கள்" என்று ஜப்பான் அரசு, நாட்டின் வடக்குப் பகுதியில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, வட கொரியாவில் நடைபெற்ற வாக்கெடுப்புக்குப் பிறகு, நான்கு உக்ரேனியப் பகுதிகளை ரஷ்யா இணைப்பதை அந்நாடு ஆதரித்தது மற்றும் அமெரிக்கா "குண்டர்கள் போன்ற இரட்டை நிலைப்பாட்டை" பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது.
மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா
பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பியோங்யாங்கின் வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச அமைப்புகளின் இயக்குநர் ஜெனரல் ஜோ சோல் சு தெரிவித்தார்.
"சுதந்திர நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது; UNSC ஐ தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சட்ட உரிமைகளை அந்நாடு மீறுகிறது," என்று அவர் கூறினார்.
"முன்னாள் யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் உள்ளிட்ட இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர்களை கட்டவிழ்த்து விட்டது, ஆனால் யு.என்.எஸ்.சி.யால் அமெரிக்காவை கேள்வி கேட்க முடியவில்லை" என்ற வட கொரியாவின் கூற்று, சர்வதேச அளவில் தொடர்ந்து போர் அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.
மேலும் படிக்க | அணு ஆயுதங்களை கைவிட மாட்டேன்: சூளுரைக்கும் கிம் ஜாங் உன்னின் அதிரடி ஏவுகணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ