கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு தற்போது அமெரிக்கா நினைவுக்கு வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர் நிலை ஒப்பந்தத்தில் தாமதம் அரசாங்கத்தை பதற்றம் அடைய செய்துள்ளது. இந்நிலையில், முடங்கிய கடன் திட்டத்தை பெற, அமெரிக்காவின் உதவியை நாட முடிவு செய்துள்ளார். நிதி அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமைப்பின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக நம்புவதால், அமெரிக்காவின் உதவியை நாட அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலதாமதத்தால் கலக்கம் அடைந்துள்ள அரசு
ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிதியமைச்சர் இஷாக் டார் இந்த வாரம் அமெரிக்க தூதரை சந்திக்கலாம் எனவும், இந்த வாரம் ஊழியர் நிலை ஒப்பந்தம் குறித்து IMF மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இன்று மாநாடு ஒன்றும் நடைபெற உள்ளது. கடந்த வாரம் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் மற்றும் IMF அதிகாரிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இந்த அதிகாரிகள் பொருளாதார கொள்கைகளை விவாதித்தனர்.
மேலும் படிக்க | கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகள்
முதலில் அனைத்து நிபந்தனைகளையும் அமல்படுத்தி, அதன் பிறகு ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் குறித்து யோசிக்குமாறு பாகிஸ்தானை IMF கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் செய்யப்பட்டால், கடந்த பல மாதங்களாக சிக்கிய ஏழு பில்லியன் டாலர் கடனை பாகிஸ்தானுக்குப் பெற முடியும். ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின் நிதிக் கொள்கை 20 சதவீதம் அதிகரித்து 300 அடிப்படை புள்ளிகளாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் விதித்த மற்றொரு நிபந்தனையை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளது. K-Electric (KE) மற்றும் விவசாயத் துறை வாடிக்கையாளர்களுக்கான மின் கட்டணத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
பாகிஸ்தானில் அதிகரிக்க உள்ள மின்சாரம் கட்டணம்
சர்வதேச நாணய நிதி உதவி பெற்ற பிறகு, அதன் நிபந்தனைக்கு ஏற்ப, ஒரு சீரான கட்டணம் பொருந்தும். மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 3.21 ரூபாய் அதிகரிக்கும். 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் குடியிருப்பு வாடிக்கையாளர்களுக்கு ஒரு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.49 மற்றும் 700 யூனிட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.3.21 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கிடையில், தற்காலிக குடியிருப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.45 உயர்த்தப்படும். விவசாயிகள் இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.16.60 வீதம் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ