மியான்மர் மக்களை சந்தித்த போப் பிரான்சிஸ்!

போப் பிரான்சிஸ்சை ஆவலுடன் சந்தித்த மியான்மர் நாட்டு மக்கள்.

Last Updated : Nov 27, 2017, 05:23 PM IST

Trending Photos

மியான்மர் மக்களை சந்தித்த போப் பிரான்சிஸ்! title=

மியான்மர் நாட்டில் புத்த மத மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் ரோஹிங்கியா முஸ்லீம் இனத்தவர் பலர் ராணுவத்தினரால் கொடுமை படுத்தப்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.

இதனால் அந்நாட்டில் இருந்து 6-லட்சத்து 20-ஆயிரம் மக்கள் அங்கிருந்து தப்பி வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரோஹிங்கியா மக்கள் ராணுவத்தினரால் கொலை, கற்பழிப்பு, வன்கொடுமை மற்றும் வலுகட்டாயப்படுத்தி இடம்பெயர்தல் போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். முஸ்லிம் ரோஹிங்கியா மக்கள் இனத்தினரை அழிக்கும் வகையில் மியான்மர் செயல்படுகிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் மியான்மர் நாட்டிற்கு வந்தார். மியான்மர் நாட்டில் உள்ள 5.1 கோடி மக்களில் 7 லட்சம் மக்கள் ரோமன் கத்தோலிக்க மக்கள். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் போப் பிரான்சிசை சந்திக்கும் ஆவலில் ரெயில் மற்றும் பேருந்து ஆகியவற்றின் வழியே யாங்கன் நகருக்கு வந்துள்ளனர்.

Trending News