யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள், பயணி ஒருவரை அவரது இடத்திலிருந்து தரதர என இழுத்து விமானத்திலிருந்து வெளியேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சிகாகோவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு விமானத்தில் உட்கார இடம் இல்லாததால் நிலையில் பயணிகள் சிலரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த காட்சியை விமானத்தில் இருந்த பயணி வீடியோ எடுத்து டிவிட்டரில் பகிர்ந்தார். வீடியோ வைரலாகி யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அந்நிறுவனம் தரப்பில், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது. ஊழியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நெட்டிசன்ஸ் வலியுறுத்தி வருகின்றனர்.
@united @FoxNews @CNN not a good way to treat a Doctor trying to get to work because they overbooked pic.twitter.com/sj9oHk94Ik
— Tyler Bridges (@Tyler_Bridges) April 9, 2017
@united @CNN @FoxNews @WHAS11 Man forcibly removed from plane somehow gets back on still bloody from being removed pic.twitter.com/njS3nC0pDl
— Tyler Bridges (@Tyler_Bridges) April 10, 2017
#flythefriendlyskies @united no words. This poor man!! pic.twitter.com/rn0rbeckwT
— Kaylyn Davis (@kaylyn_davis) April 10, 2017