உலகத்தில் பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றும் தங்களை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தங்களைஅழகுபடுத்திக்கொள்வார்கள்.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களோ இல்லையோ நாம் நம்மை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாகவே இருக்கும். இதனால் தான் பெண்கள் மத்தியில் செல்ஃபி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா?, நம்மை நாமே ரசித்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட லேட்டஸ்ட் ட்ரெண்ட் தான் செல்ஃபி. செல்ஃபி இளம் வயதுடையவர்களிடம் ஒரு பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. தற்போது ட்ரெண்டில் இருப்பது என்ன தெரியுமா?. சாவதற்கு உண்ணும் செல்ஃபி சத்த பிறகும் செல்ஃபி என்பதுதான் உண்மை.
இதை தொடர்ந்து என்னதான் இருந்தாலும் பெண்களுக்கு தங்கள் உடல் அமைப்பு பற்றி திருப்தி இல்லை என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிலும், 100-க்கும் 90% இந்திய பெண்கள் தங்களை நேசிப்பதற்கு பதில் தங்களை தானே வெறுப்பதாக தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் பிரேக்கிங் தி சைலன்ஸ் அபவுட் இந்தியன் உமன் (CHUP: Breaking the Silence About India's Women) என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு 600-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்கள் உடல் அமைப்பு பற்றி என்ன நினைக்கின்றனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் கருத்துக்களை தெரிவித்த 90 சதவிகித பெண்கள் கூறியது தங்கள் உடல் அமைப்பில் சுயவெறுப்பையே காட்டுகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.சில பெண்களுக்கு உடல் உருவத்தில் அதிக வளர்ச்சி இருக்கும், சில பெண்களுக்கு உடல் வளர்ச்சி குறைவாக இருக்கும். தங்களது அழகையும், வளார்ச்சியையும் மற்ற பெண்களோடு ஒப்பிட்டு தங்களை தாங்களே குறைத்து மதிப்பிட்டு வெறுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில பெண்கள் தங்களது தோற்றத்தையும், உயரத்தையும், அழகையும், நிறத்தையும் மற்றவர்களோடு ஒப்பிட்டு போட்டிபோட முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், இந்த மன அழுத்தமானது சில காலகட்டத்தில் அது சுயவெறுப்பாக மாறுகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மை என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.