இந்திய ரயில்வேயின் சமீபத்திய புதுப்பிப்பு: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வேக்கு புத்துயிர் அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் செய்த மாற்றங்களில், புதிய ரயில்கள் தொடங்குதல், ரயில் நிலையங்களை புதுப்பித்தல், விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் அடங்கும். சமீபத்தில் கூட, ரயில்வே அமைச்சகம் அதிகாரிகளின் அறைகளின் மேஜையில் பெல் இருக்காது என்று அறிவித்தார். ரயில்வே அமைச்சரின் இந்த முடிவு, தற்போது அமல்படுத்தவும் பட்டுள்ளது. இந்த முடிவின்படி, அதிகாரிகள் உதவியாளரை (Peon) அழைக்க வேண்டும் என்றால், இதற்காக அவர்களே தானாக எழுந்து அறைக்கு வெளியே சென்று அழைக்க வேண்டும்.
மந்திரி அறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இது தவிர, அதிகாரி பிஸியாக இருக்கும்போது, அவர் தொலைபேசியில் இருந்து உதவியாளரை அழைக்க வேண்டும். ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவு இப்போதுதான் அமைச்சர்கள் அறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ரயில்வே வாரியத்திலும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனி எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சரி, அதிகாரிகள் தானாக எழுந்து பியூனை அழைக்க வேண்டும். தற்போது ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே அமைச்சரான பிறகு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். முன்னதாக, ரயில்வே கோச் தொடர்பாக அவர் ஒரு பெரிய முடிவை எடுத்தார். இதன் ஒரு பகுதியாக, ரயிலை நவீனமயமாக்குவது மட்டுமின்றி, நோய்வாய்ப்பட்ட பயணிகளிடம் சிறப்பு கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. இனி ரயிலில் இந்த சிறப்பு வசதி வழங்கப்படும்
சேவைகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது
ரயில் சேவைகளை மேம்படுத்தும் வகையில் தொடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சேவையில் முன்னேற்றத்துடன், ரயில் வேகம், பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிகளின் தூய்மை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், சிறந்த பெட்டிகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்போது ரயில்வே பயணிகளுக்கு பல விருப்பங்களை பயணத்தில் வைத்துள்ளது. இந்நிலையில், பயணத்தின் போது பயணிகளின் உடல்நிலையை கவனித்து, பயணத்தின் போது வசதிகளை ஏற்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
புதிய வடிவிலான ரயில்வேயை நாடு காணும்
வரும் ஆண்டுகளில், நாடு புதிய வடிவிலான ரயில்வேயை காணும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை அடங்கிய மருத்துவப் பெட்டிகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவித்தார். இதுமட்டுமின்றி, முன் வரிசை ஊழியர்கள் அதாவது ரயில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில் காவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் முதலுதவி அளிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பயணிகளின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்கும். இதைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆர் பகுதியில் இயங்கும் ரேபிட் ரெயில் பெட்டியில் ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மீரட்டில் இருந்து டெல்லிக்கு ஒரு நோயாளி அனுப்ப பரிந்துரைக்கப்பட்டால், அவரை விரைவு ரயில் மூலம் குறைந்த செலவில் கொண்டு வர முடியும்.
மேலும் படிக்க | ITR Filing: அதிகபட்ச பணத்தை திரும்ப பெற... இந்த 5 எளிய வழியை தெரிந்துகொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ