Diwali Muhurat Trading: தீபாவளியன்று பங்குச்சந்தையில் நடக்கும் முகூர்த்த வர்த்தகம்.. நாள், நேரம் இதுதான்

Diwali Muhurat Trading: முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 30, 2024, 02:34 PM IST
  • முகூர்த்த வர்த்தக அமர்வு என்றால் என்ன?
  • இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகம் எந்த நாளில் நடக்கும்?
  • முகூர்த்த வர்த்தகம் எந்த நேரத்தில் நடக்கும்?
Diwali Muhurat Trading: தீபாவளியன்று பங்குச்சந்தையில் நடக்கும் முகூர்த்த வர்த்தகம்.. நாள், நேரம் இதுதான் title=

Diwali Muhurat Trading: பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். தீபாவளியை முன்னிட்டு நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகளான என்எஸ்இ (NSE), பிஎஸ்இ (BSE) மற்றும் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) ஆகியவற்றில் முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 1, 2024 அன்று நடைபெறும். முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும். 

சுப நேரத்தில் நடைபெறும் இந்த சிறப்பு வர்த்தக அமர்வில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் புதிய நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பங்குகள் மற்றும் பொருட்களை வாங்குகிறார்கள்.

இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகம் எந்த நாளில் நடக்கும்?

இந்த ஆண்டு அக்டோபர் 31, நவம்பர் 1 என இரு நாட்களும் தீபாவளி திதி இருப்பதால் பங்குச்சந்தையில் முகூர்த்த வர்த்தகம் எப்போது நடக்கும் என்ற கேள்வி பலருக்கு இருந்தது. இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகத்தின் சிறப்பு அமர்வு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். "முகூர்த்த வர்த்தகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்படும்." என்று NSE அறிவிப்பு தெரிவிக்கின்றது. MCX -இலும் அனைத்து கமாடிடிகள் மற்றும் இண்டெக்ஸ்களுக்கும் நவம்பர் 1 ஆம் தேதி முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும். 

முகூர்த்த வர்த்தகம் எந்த நேரத்தில் நடக்கும்?

தேசிய பங்குச் சந்தையான என்எஸ்இ வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கும். பொசிஷன் லிமிட், கொலேட்ரல் வேல்யூ மற்றும் டிரேட் மாடிஃபிகேஷன் ஆகியவற்றுக்கான கட்-ஆஃப் நேரம் இரவு 7:10 மணியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குப் பிறகு, புதிய பொசிஷன்களை எடுக்கவோ அல்லது ஏற்கனவே செய்த வர்த்தகத்தில் மாற்றங்களை செய்யவோ முடியாது. 

கூடுதலாக, நவம்பர் 1, 2024 அன்று முகூர்த்த வர்த்தகம் நடைபெறுவதால், அக்டோபர் 31, 2024 மற்றும் நவம்பர் 1, 2024 ஆகிய வர்த்தகத் தேதிகளுக்கான பே-இன்/பே-அவுட் பரிவர்த்தனைகள் நவம்பர் 4, 2024 அன்று காலை 8:30 மணிக்கு செட்டில் செய்யப்படும்.

MCX இலும் சிறப்பு வர்த்தக அமர்வு ஏற்பாடு செய்யப்படும்

MCX தனது சிறப்பு வர்த்தக அமர்வையும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடத்தும். இதனுடன், மாலை 5:45 முதல் 5:59 மணி வரை ஒரு முன் அமர்வு (சிறப்பு அமர்வு), அதாவது ப்ரீ செஷன் நடத்தப்படும். எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, மாலை 6:00 மணி முதல் இரவு 7:15 மணி வரை க்ளையண்ட் கோட் மாடிஃபிகேஷன் அமர்வு இருக்கும். 

மேலும் படிக்க | நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோ

க்ளையண்ட் கோட் மாடிஃபிகேஷன் அமர்வு என்றால் என்ன?

வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, க்ளையண்ட் கோட் மாடிஃபிகேஷன் அமர்வு என்றால், ஒரு வாடிக்கையாளரின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்ய வர்த்தக வழிமுறை, ஸ்கிரிப்டுகள் அல்லது தளங்களில் மாற்றங்களைச் செய்வதாகும்.

முகூர்த்த வர்த்தக அமர்வின் பாரம்பரியம் முதலீட்டாளர் நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது

முகூர்த்த வர்த்தகத்தின் பாரம்பரியம் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. பிஎஸ்இ அதை முறையாகத் தொடங்கியது. இந்தக் காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் வரவிருக்கும் ஆண்டில் செழிப்பைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் இந்த முகூர்த்த வர்த்தக அமர்வு நடக்கிறது. பிஎஸ்இக்குப் பிறகு, என்எஸ்இ -யும் முகூர்த்த வர்த்தக அமர்வை ஒரு சிறப்பு வர்த்தக அமர்வாக அங்கீகரித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் முகூர்த்த வர்த்தக அமர்வின் போது சென்செக்ஸ் எப்படி இருந்துள்ளது என காணலாம்:

- 2023: 0.55%
- 2022: 0.88%
- 2021: 0.49%
- 2020: 0.45%
- 2019: 0.49%
- 2018: 0.70%
- 2017: -0.60%
- 2016: -0.04%
- 2015: 0.48%
- 2014: 0.24%
- 2013: 0.20%

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு உங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முகூர்த்த வர்த்த அமர்வில் வர்த்தகம் செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.)

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News