வீட்டில் தங்கம் இருக்கா? இந்த அளவுக்கு மேல் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்!!

Gold Storage Limit: வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்? இதற்கு வரம்பு உண்டா? வீட்டில் தங்கம் வைப்பதற்கு பல்வேறு வரி விதிப்புகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2022, 06:13 PM IST
  • தங்கத்தின் மீதான வரி விதிப்பின் விதிகள் என்ன?
  • யார் எவ்வளவு தங்கத்தை சேமிக்க முடியும்?
  • எந்த சூழ்நிலையில் தங்கம் பறிமுதல் செய்யப்படும், எந்த சூழ்நிலையில் பிரச்சனை இருக்காது?
வீட்டில் தங்கம் இருக்கா? இந்த அளவுக்கு மேல் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்!! title=

Gold Storage Limit: பொதுவாக இந்தியர்கள் தங்கத்தின் மீது பற்று கொண்டவர்கள். இந்தியாவில் தங்கம் ஒரு விலையுயர்ந்த உலோகம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வாகவும் உள்ளது. இது நமது பாரம்பரியத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. தங்கம் இந்திய குடும்பத்தின் மிகவும் நம்பகமான முதலீடாகும். ஒவ்வொரு இந்திய குடும்பமும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் நீங்கள் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கு வெவ்வேறு வரி விதிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? 

இதைப் பற்றிய விவரங்கள் தெரியாதென்றால் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் முதலீட்டைப் பாதுகாக்க இது அவசியமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கத்திற்கான ஆதாரத்தில் சரியான தெளிவு இல்லாமல் ஏதேனும் குளறுபடி இருந்தால் உங்கள் தங்கம் பறிமுதல் செய்யப்படலாம்.

யார் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும்?

CBDT (மத்திய நேரடி வரிகள் வாரியம்) நாட்டில் யார் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம் என்பது குறித்து சில விதிகளை விதித்துள்ளது. அதன்படி,

- திருமணமான பெண் தன்னுடன் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.
- திருமணமாகாத ஒரு பெண் தன்னுடன் 250 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.
- ஒரு ஆண் தன்னுடன் 100 கிராம் தங்கத்தை வைத்திருக்க முடியும்.

இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ள வரம்பிற்கு மேலும் நீங்கள் தங்கத்தை வைத்திருக்கலாம். ஆனால் இந்த தங்கத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என்ற பதில் உங்களிடம் இருக்க வேண்டும்.

தங்கத்தின் மீதான வரி விதி என்ன

உதாரணமாக, நீங்கள் உங்கள் வருமானத்தில் தங்கத்தை வாங்கியிருந்து, அதை நீங்கள் வெளிப்படுத்தியிருந்தால் அல்லது நீங்கள் விவசாயத்தில் சம்பாதித்த பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படாது. இது தவிர, வீட்டுச் செலவுகளைச் சேமித்து அதில் தங்கம் வாங்கியிருந்தாலோ அல்லது பரம்பரையாக தங்கமாக இருந்தாலோ, அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. எனினும், பரம்பரை தங்கம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியம். அதாவது, உங்கள் தங்கம் எங்கிருந்து வந்தது, எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்ற தகவல் உங்களுக்குத் தெரிந்தால், தங்க சேமிப்பு விஷயத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மேலும் படிக்க | 10 வருடம் வாடகை வீட்டில் இருந்தால், அந்த வீடு நமக்கு சொந்தமா? உண்மை என்ன? 

விற்பனைக்கு வரி செலுத்த வேண்டும்

தங்கத்தை வைத்திருப்பதற்கு வரி இல்லை, ஆனால் வைத்திருக்கும் தங்கத்தை விற்றால் வரி கட்ட வேண்டும். மூன்றாண்டுகள் தங்கத்தை வைத்திருந்து விற்றால், இந்த விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் 20% என்ற விகிதத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.

- தங்கத்தை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் அதை விற்றால், அதிலிருந்து வரும் வருமானம் உங்களின் மொத்த வருமானத்தில் சேர்க்கப்படும். மேலும் நீங்கள் வரி செலுத்துபவராக எந்த வரி வரம்பில் வருகிறீர்களோ அதற்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.

- பிசிக்கல் தங்கத்திற்குப் பதிலாக, சோவரின் தங்கப் பத்திரத்தைப் பற்றி பேசினால், அதற்கும் அதே விதி பொருந்தும். அதன் விற்பனை மூலம் நீங்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு, உங்கள் வரி வரம்பு பிராக்கெட்டுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். இது குறியீட்டுக்குப் பிறகு 20% LTCG (நீண்ட கால மூலதன ஆதாய வரி) மற்றும் குறியீட்டு இல்லாமல் 10% LTCG-ஐ ஈர்க்கும்.

- நீங்கள் பத்திரத்தை மெச்யூரிட்டி வரை வைத்திருந்தால், அதன் வட்டி விகிதத்திற்கு நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

எந்த சூழ்நிலையில் பறிமுதல் செய்யப்படும், எந்த சூழ்நிலையில் இருக்காது

மேலே குறிப்பிட்டுள்ள வரம்பிற்குள் தங்கத்தை வீட்டில் வைத்திருந்தால், விசாரணையில் பறிமுதல் செய்ய முடியாது. ஆனால் இந்த விதி குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வைத்திருக்கும் தங்கத்திற்கு மட்டுமே பொருந்தும். குடும்பத்தில் வேறு ஒருவரின் தங்கம் வைத்திருந்தால், அதை பறிமுதல் செய்யலாம். உங்கள் வருமான ஆதாரத்தை நீங்கள் நிரூபிக்கும் வரை உங்கள் தங்கம் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News