EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. அலுவலக பணிகளில் இருக்கும் பெரும்பான்மையானோருக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இபிஎஃப் கணக்கில் பங்களிக்கப்படுகின்றது. பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது.
இபிஎஃப்ஓ சமீபத்திய புதுப்பிப்பு:
இப்போது இபிஎஃப் ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. இந்த செய்திக்காக, பிஎஃப் சந்தாதார்ரகள் மிகுந்த ஆவலுடன் காத்திருகிறார்கள். ஊழியர்களின் பிஎஃப் வட்டித்தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த மாத இறுதிக்குள் அரசு இந்த பரிசை வழங்கலாம் என்றும், இதன் மூலம் ஏராளமான ஊழியர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. மோடி அரசாங்கம் 2022-23 நிதியாண்டிற்கு 8.15 சதவீத வட்டியை அளிப்பதாக முன்னர் அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
முன்னதாக, அரசு பிஎஃப் தொகைக்கு 8.1 சதவீத வட்டியை அளித்தது. இது பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இடையே அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. வட்டி தொகை எப்போது அனைவரது கணக்கிலும் வரவு வைக்கபப்டும் என்பது குறித்து இன்னும் அரசாங்கம் தெளிவாக அறிவிக்கவில்லை. எனினும், நவம்பர் இறுதிக்குள் இது நடக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் சமீபத்தில் 2022-23 நிதியாண்டில் பிஎஃப் உறுப்பினர்களுக்கு மொத்த வட்டி விகிதமாக 8.15 சதவீதத்தை வழங்குவதற்கு தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிக்கை அளித்துள்ளார். இதுமட்டுமின்றி மொத்தம் 24 கோடி கணக்குகளுக்கு 8.15 சதவீத வட்டித் தொகை கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இபிஎஃப்ஒ வட்டி விகிதம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியான திசையில் உள்ளதில் தனது அரசாங்கம் திருப்தி அடைவதாகவும் அவர் கூறினார். நவம்பர் இறுதிக்குள் இந்த வட்டித்தொகை அனைத்து சந்தாதாரர்களின் கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்பட்டுவிடும் என நம்பப்படுகின்றது.
பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கபப்டும்?
பிஎஃப் ஊழியர்களின் இபிஎஃப் (EPF) கணக்கில் மத்திய அரசு 8.15 சதவீத வட்டிக்கான தொகையை டெபாசிட் செய்யும். இது சந்தாதாரர்களின் கணக்கில் இருக்கும் தொகைக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, ஒருவரது கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத வட்டியில் அவருக்கு சுமார் ரூ.41,000 கிடைக்கும். ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், சுமார் ரூ.50 ஆயிரம் வட்டியாக டெபாசிட் செய்யப்படும்.
கணக்கு இருப்பை செக் செய்வது எப்படி?
உங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) எவ்வளவு தொகை வந்துள்ளது என்பதை சரிபார்க்க நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இதை செய்யலாம். பின்வரும் வழிகளில் பிஎஃப் கணக்கு இருப்பை செக் செய்யலாம்.
1. உமங் செயலி:
EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை (EPF Balance) சரிபார்க்கலாம்.
2. இபிஎஃப்ஓ இணையதளம்
EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
3.மிஸ்ட் கால்
மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.
4. எஸ்எம்எஸ்
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள்.
இந்தியாவில் இபிஎஃப் ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக உள்ளது. இது ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ