IRCTC இல் (இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) புகார் பதிவு செய்வது எப்படி: இந்திய இரயில்வே வேகமான மற்றும் மலிவான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அவர்களின் பயணத்தின் ஒவ்வொரு மைலையும் அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. இருப்பினும், சில சமயங்களில் ரயிலில் பயணிக்கும் போது பல பிரச்சனைகளை பயணிகள் சந்திக்க நேரிடுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் புகார் கொடுப்பதைத் தவிர, வேறு வழியின்றி தவிக்கின்றனர் பயணிகள். எனவே நீங்களும் உங்களின் பயணத்தின் போது மோசமான ரயில் பயண அனுபவத்தைப் பெற்றவராக இருந்து, இது தொடர்பாக புகார் அளிக்க விரும்பினால், எங்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே செய்யலாம். இந்த நிலையில் இந்த கட்டுரையில் IRCTC (இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) மீது எப்படி புகார் செய்வது என்று நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறோம், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைனில் புகாரை எவ்வாறு பதிவு செய்வது
1. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஃபோனில் https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. ரயில்கள் தொடர்பான புகாரை பதிவு செய்ய, ரயில் புகார் (Train Complaint) ஆப்சனை கிளிக் செய்யவும்
3.உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு Get OTP என்பதைக் கிளிக் செய்யவும்
4. அதில் பெறப்பட்ட OTP ஐ டைப் செய்து சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்
5. இப்போது, PNR எண் மற்றும் புகாரின் வகையை நீங்கள் டைப் செய்யுங்கள்(இது புகாரின் தன்மையைக் குறிப்பிட நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய விருப்பத்தை தேர்வு செய்யுங்கள் )
6.அதில் Sub typeயைத் தேர்ந்தெடுத்து என்ன என்ன நடந்தது என்பதை பதிவ செய்யுங்கள்
7. அத்துடன் Sub type புகார் தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோவை அப்லோடு செய்யுங்கள்
8. இப்போது, அந்தபுகார் தொடர்பாக சிறிய விளக்கத்தை எழுதுங்கள்
9. அதனை செய்து முடித்ததும் புகாரைப் பதிவு செய்ய சப்மிட் பொத்தானைக் கிளிக் செய்யவும்
https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp தளத்தில் ரயில் நிலையங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய முடியும். அதற்கு, ஸ்டேஷன் புகார் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். பின்னர், தேவையான தகவலை டைப் செய்து பதிவு செய்ய சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட செய்தியாளர்கள்.. பதிலளிக்காமல் நழுவிய நிதிஷ் குமார்.. என்னாச்சு? புகாரைப் பதிவுசெய்த பிறகு, நீங்கள் ஒரு குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள். உங்கள் புகாரின் நிலை என்ன என்பதை பார்க்க இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். அதில் உங்கள் புகார் சரி செய்யப்பட்டுள்ளதா என்பது தெரிந்துவிடும்.
139 என்கிற எண்ணிலும் புகார் பதிவு செய்யலாம்
இதுபோன்ற வழக்குகள் குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், யாரேனும் ஒரு பயணியின் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை அல்லது பெர்த்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், முதலில் அந்த விஷயத்தை அந்த ரயிலின் TTE க்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது தவிர, யாராவது உங்களை மிரட்ட முயன்றால், ரயிலில் உள்ள ரயில்வே போலீஸ் படை வீரர்களின் உதவியையும் நாடலாம். உங்கள் புகாரை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாவிட்டால், ரயில்வே உதவி எண் 139ல் உங்கள் புகாரையும் பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... இனி இரட்டிப்பு பலன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ