Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோ

Mutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், ​​உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2024, 06:44 PM IST
  • பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
  • நல்ல வாழ்க்கைத் தரம், உயர் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் தரமான கல்வி ஆகியவை தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.
  • இந்தத் தேவைகளில் பெரும்பாலானவற்றை எவ்வாறு பூர்த்தி செய்வது?
Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோ title=

Mutual Fund SIP: பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். நல்ல வாழ்க்கைத் தரம், உயர் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் தரமான கல்வி ஆகியவை தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். இந்தத் தேவைகளில் பெரும்பாலானவற்றை எவ்வாறு பூர்த்தி செய்வது? பணத்தின் மூலம்!! உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், ​​உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவில் உயர்கல்வி என்பது விலை உயர்ந்ததாக இருக்கலாம். மேலும் உங்கள் குழந்தையை வெளிநாட்டுக்கு அனுப்ப விரும்பினால், உங்களுக்கு கணிசமான தொகை தேவைப்படலாம். உங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் பிற தேவைகளுக்கான செலவுகளை ஈடுசெய்ய உங்கள் குழந்தை பிறக்கும் போதே முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். இதன் மூலம் உங்கள் குழந்தை பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்விக்கு தயாராகும் நேரத்தில், உங்களிடம் கணிசமான கார்பஸ் இருக்கும்.

SIP calculator

SIP மூலம் மியூசுவல் ஃபண்டுகளில் (Mutual Fund) செய்யப்படும் முதலீடு உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் போது ஒரு பெரிய கார்பஸை உருவாக்குவதற்கான விருப்பங்களில் ஒன்றாக இருக்கலாம். அதற்கு, பெரிய மாதாந்திர முதலீடும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாதாந்திர எஸ்ஐபி -களில் வெறும் ரூ.5,000 மற்றும் ரூ.10,000 என்ற தொகையில் தொடங்கி, ஒருவர் தங்கள் குழந்தைகளுக்காக கணிசமான நிதியை சேகரிக்க முடியும். அதை எப்படி செய்யலாம் என்று இங்கே காணலாம்:

ரூ.5,000 மாதாந்திர SIP -இல் முதலீட்டை தொடங்கினால்:

18 ஆண்டுகளுக்கு SIP மூலம் மாதம் ரூ.5,000 முதலீடு செய்து, உங்கள் முதலீட்டில் 12 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், 18 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு (Investment) ரூ.10,80,000 ஆகவும், நீண்ட கால மூலதன ஆதாயங்கள் ரூ.27,47,196 ஆகவும் இருக்கும். இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.38,27,196 ஆக இருக்கும்.

ரூ. 5,000 இல் தொடங்கும் ஸ்டெப்-அப் எஸ்ஐபியை தேர்வு செய்தால்:

- நீங்கள் ஸ்டெப்-அப் எஸ்ஐபியைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் தொகையை ஐந்து சதவிகிதம் அதிகரித்தால், 18 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.16,87,943 ஆக இருக்கும்.

- 12 சதவீத வருடாந்திர வருமானத்தில், உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.34,57,451 ஆகவும், எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.51,45,394 ஆகவும் இருக்கும்.

மேலும் படிக்க | மாணவர்களுக்கான கிரெடிட் கார்டு திட்டம் : 4 லட்சம் ரூபாய் வட்டி இல்லாமல் கிடைக்கும் - பெறுவது எப்படி?

ரூ.10,000 மாதாந்திர SIP -இல் முதலீட்டை தொடங்கினால்:

உங்கள் குழந்தை பிறக்கும் போது ரூ.10,000 மாதாந்திர SIPஐத் தொடங்கினால், 18 ஆண்டுகளில், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ. 21,60,000 ஆகவும், 12 சதவீத வருடாந்திர வருமானத்தில், நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.54,94,392 ஆகவும் இருக்கும், எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.76,54,392 ஆகவும் இருக்கும்.

ரூ. 10,000 இல் தொடங்கும் ஸ்டெப்-அப் எஸ்ஐபியை தேர்வு செய்தால்:

- நீங்கள் ரூ. 10,000 மாதாந்திர SIP ஐத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் தொகையை ஐந்து சதவீதம் அதிகரித்தால், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ. 33,75,886 ஆக இருக்கும், 12 சதவீத வருடாந்திர வருமானத்தில், உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.69,14,901 ஆக இருக்கும், எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.1,02,90,788 ஆக இருக்கும்.

- ஆகையால், நீங்கள் ஆண்டுக்கு 12 சதவிகித வருமானத்தைப் பெற்றாலும், 18 ஆண்டுகளில், ரூ. 10,000 எஸ்ஐபியில் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதவீதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் உங்கள் குழந்தைக்கு ரூ.1 கோடிக்கு மேல் பெறலாம்.

உங்கள் SIP முதலீட்டில் 15 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், 16 ஆண்டுகளில் நீங்கள் அதே தொகையை சேர்க்கலாம்.

மேலும் படிக்க | இந்திய வங்கிகளை குறிவைத்து சைபர் அட்டாக்: வங்கிகளுக்கு RBI ஹை அலர்ட் எச்சரிக்கை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News