சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் உங்களுக்கு, நிதி பிரச்சனை காரணமாக, உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறதா... கவலை வேண்டாம்... பிரதம மந்திரியின் விஸ்வகர்மா திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும். பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, ஊக்கமளித்து, அவர்கள் தங்கள் தொழிலை தொடங்க உதவும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.13,000 கோடி ஒதுக்கியுள்ளது.
கடன் உதவி பெற தகுதியான நபர்கள் விபரம்
பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலை கட்டுபவர், சலவைத் தொழிலாளி, தையல் கலைஞர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பக் கலைஞர், காலணிகள் செய்பவர், கொத்தனார், கயிறு திரிப்பவர், கூடை/ பாய் நெய்பவர்கள், துடைப்பம் தயாரிப்பவர்கள், பொம்மை தயாரிப்பவர்கள்,மீன் பிடி வலை பின்னுபவர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் கடன் உதவி பெற்று தொழிலை தொடங்கலாம்.
ரூபாய் மூன்று லட்சம் வரை கடன் உதவி தரும் விஸ்வகர்மா திட்டம்
விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இரண்டு கட்டங்களாக ரூபாய் 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. முதலில் தொழில் தொடங்க ரூபாய் ஒரு லட்சமும், பின்னர் தொழில் விரிவாக்கத்திற்காக ரூபாய் 2 லட்சமும் கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பதாரர் பிணை ஏதும் கொடுக்க தேவையில்லை. மேலும், கடனுக்கு மிக குறைந்த அளவை வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனுக்கான வட்டி 5% மட்டுமே.
திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மற்றும் உதவித்தொகை
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி மட்டும் இன்றி, இந்த தொழிலை தொடங்க திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி காலத்தின் போது உதவி தொகையும் வழங்கப்படும். தினசரி உதவித்தொகையாக 500 ரூபாய் கிடைக்கும். இந்தத் திட்டத்தினை மத்திய அரசின் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.
பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கடன் பெற நிபந்தனைகள்
1. விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கடன் பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரரின் வயது 18 வயதிற்கு மேலும், 50 வயதுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். அதாவது 18 - 50 வயதினருக்கு இந்த கடன் சலுகை கிடைக்கும்.
3. நீங்கள் தொடங்க விரும்பும் தொழிலில், உங்களுக்கு திறன் இருப்பதற்கான சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
4. விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வரும் குறிப்பிட்ட 18 வகை கைவினைத் தொழில்களில் ஒன்றை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
5. கடந்த 5 ஆண்டுகளில். தொழில் மேம்பாட்டிற்காக மத்திய அரசு அல்லது மாநில அரசின் பிற கடன் சார்ந்த திட்டங்களின் கீழ் கடன் பெற்றிருக்கக்கூடாது, எ.கா. PMEGP, PM SVANidhi, முத்ரா கடன் போன்றவை.
PM விஸ்வகர்மா திட்டத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் முறை
விஸ்வக்ர்மா திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பும் தகுதி பெற்ற நபர்கள், www.pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு, கடன் உதவியை பெறலாம்.
தமிழகத்தில் நடத்தப்படும் விஸ்வகர்மா திட்ட பதிவு முகாம்கள்
தமிழகத்தின் பல இடங்களில் விஸ்வகர்மா திட்டத்தில் பயன் பெற, தங்களை பதிவு செய்து கொள்ள முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மேலும் படிக்க | மாதம் ரூ.9,250 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உடனே படிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ