அனைத்து கிரெடிட் கார்ட் பேமெண்டிலும் கேஷ்பேக் கிடைக்கணுமா? இதோ டிப்ஸ்

Credit Card Cashback: கிரெடிட் கார்டில் கிடைக்கும் கேஷ்பேக்கை நீங்களும் மிக துல்லியமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இந்த பயனுள்ள விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 19, 2023, 05:11 PM IST
  • சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும்.
  • சரியான நேரத்தில் ரெடீம் செய்யவும்
  • வெகுமதிகள் அல்லது கேஷ்பேக்குகளில் கவனம் தேவை.
அனைத்து கிரெடிட் கார்ட் பேமெண்டிலும் கேஷ்பேக் கிடைக்கணுமா? இதோ டிப்ஸ் title=

Credit Card Cashback: இந்நாட்களில் நம்மில் பலர் பொருட்களை வாங்கவோ, பிற சேவைகளை பெறவோ, ரொக்கமாக பணம் செலுத்துவதற்கு பதிலாக பெரும்பாலும் கிரெடிட், டெபிட் கார்டுகள் அல்லது யுபிஐ ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்துவதால், நாம் அதிக பணத்தை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் இந்த வகையில் நமது கட்டணங்களை செலுத்துவதன் காரணமாக நமக்கு கூடுதல் நன்மைகளும் ஏற்படுகின்றன. கிரெடிட் கார்டின் நன்மைகளைப் பெற, முதலில் சரியான கார்டுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொண்டு, நீங்கள் அதிகபட்சமாக பணம் செலுத்தும் இடங்களில் அதற்கேற்ற கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும் கேஷ்பேக், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பலர் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் கட்டணங்களை செலுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இது வாடிக்கையாளர்கள் இடையில் மிக பிரபலமாக இருக்கவும் இதுவே காரணமாகும். கிரெடிட் கார்டுகள் மளிகை பொருட்கள், உணவு, வீட்டு சாமான்கள், பொழுதுபோக்கு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டணங்களை செலுத்துதல் ஆகியவற்றில் செலவழிக்க கேஷ்பேக் வழங்குகின்றன. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது, நீங்கள் தேர்வு செய்யும் சலுகையைப் பொறுத்து குறிப்பிட்ட சதவீத கேஷ்பேக் கிடைக்கும். கிரெடிட் கார்டில் கிடைக்கும் கேஷ்பேக்கை நீங்களும் மிக துல்லியமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இந்த பயனுள்ள விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

கேஷ்பேக் - எப்படி வேலை செய்கிறது?

பொதுவாக, வாடிக்கையாளர்கள் ஈ-காமர்ஸ் அல்லது ஏதேனும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரிடம் ஷாப்பிங் செய்யும் போது, அவர்களது கிரெடிட் கார்டில் கேஷ்பேக் பெறத் தகுதி பெற்றால், தங்கள் பணத்தில் 1% வரை திரும்பப் பெறுவார்கள். கேஷ்பேக் என்பது கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளருக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். ஒவ்வொரு வாங்குதலுக்கும், அதாவது ஒவ்வொரு பர்சேசுக்கும் சில்லறை விற்பனையாளர் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் திருப்பித் தர வேண்டும். பின்னர் வங்கி இந்த வருவாயில் ஒரு பகுதியை வாடிக்கையாளருடன் பகிர்ந்து கொள்கிறது.

சரியான கேஷ்பேக் கார்டை எவ்வாறு தேர்வு செய்வது

1. சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும் ( Choose the right credit card)

கிரெடிட் கார்டின் நன்மைகளைப் பெற, முதலில் சரியான அட்டையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் பணம் செலவழிக்கும் விதத்தின் அடிப்படையில் கார்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு கார்டு வகையிலும் ஒவ்வொரு முறை நீங்கும் எதையாவது வாங்கும்போதும் கேஷ்பேக்குடன் அதிக மதிப்பையும் (value back) பெறுவீர்கள். கார்டை வாங்கும் முன், நீங்கள் எங்கு அதிகம் பணம் செலுத்துகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் பயணத்திற்கு அதிக செலவு செய்தால், பயணத்தின் போது அதிக சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கும் கார்டைத் தேர்வு செய்யவும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மாஸ் புத்தாண்டு பரிசு: 4-5% டிஏ ஹைக், மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது!!

2. சரியான நேரத்தில் ரெடீம் செய்யவும் (Redeem on time)

கிரெடிட் கார்டு (Credit Card) சலுகையைப் பொறுத்து ஒவ்வொரு கட்டணத்திற்கும் கேஷ்பேக் அல்லது கூப்பன்களை வழங்குகிறது. சில சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். எனவே, கிரெடிட் கார்டு அறிக்கையை (credit card statement) அவ்வப்போது சரிபார்க்கவும். கார்டிலிருந்து அதிகப் பலன்களைப் பெற, உங்கள் கேஷ்பேக்கை அவ்வப்போது ரெடீம் செய்வது நல்லது.

3. புதுப்பித்தல்களை அறிந்துகொள்ளுங்கள் (Stay updated)

உங்கள் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த புதுப்பிப்புகளைக் கண்காணிக்கவும். நீங்கள் பயனடையக்கூடிய புதிய சலுகைகள், விளம்பரங்கள் அல்லது கேஷ்பேக்குகளை நிறுவனங்கள் அடிக்கடி அறிமுகப்படுத்துகின்றன. புதுப்பித்தல்களை உடனே அறிந்துகொள்ள உங்கள் வங்கியின் கிரெடிட் கார்டு இணையதளம் அல்லது ஆப்ஸைக் கண்காணித்து, உங்கள் கேஷ்பேக்கை திறம்பட பயன்படுத்தவும். 

4. வெகுமதிகள் அல்லது கேஷ்பேக்குகளில் கவனம் தேவை ( Keep track of rewards or cashback)

நீங்கள் கார்டை பயன்படுத்தும் போதெல்லாம், ஒவ்வொரு வாங்குதலுக்கும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஒரே சலுகையை வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில கார்டுகள் மளிகைப் பொருட்களுக்கு 5% கேஷ்பேக் வழங்கலாம், ஆனால் எரிபொருள் அல்லது உணவுக்கு 1% மட்டுமே வழங்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அதிகபட்ச பலன்களைப் பெற இந்த வகைகளின்படி நீங்கள் வாங்கும் பொருட்கள், கடைகள், பயன்படுத்தும் கார்டுகளை திட்டமிடுங்கள்.

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் பணம் பத்திரமா இருக்கும்: டாப் 3 வங்கிகளின் பெயர்களை வெளியிட்ட RBI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News