கொரோனா வைரஸ் காரணமாக, ஒருபுறம், உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் பெரும் பாதிபிற்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவிலும் பாதிப்பு உள்ளது. ஆனால் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (CM Yogi Adityanath) இந்நிலையிலும் சாதனை படைத்துள்ளார். இந்த நெருக்கடி காலத்திலும் உலகெங்கிலும் உள்ள நாடுகள் உத்திர பிரதேசத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளன. 10 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ரூ .45,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
ஜப்பான், அமெரிக்கா (America), இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, தென் கொரியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீட்டிற்கான திட்டங்களை முன்வைத்துள்ளன என்று உ.பி. அரசாங்கத்தின் (UP Government) உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு (IIDC) ஆணையர் அலோக் டாண்டன் தெரிவித்தார். உ.பி.யில் முதலீட்டிற்கு விண்ணப்பித்த நிறுவனங்களில் பல பெரிய நிறுவனங்கள் அடங்கும்.
முதலீட்டு விபரங்கள்:
1. ஹிரானந்தனி குழுமம், கிரேட்டர் நொய்டாவில் 750 கோடி முதலீட்டில் டேட்டா செண்டரை உருவாக்க உள்ளது
2. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ரூ .300 கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பிரிவை அமைக்க உள்ளது
3. அசோசியேட்டட் பிரிட்டிஷ் ஃபுட் பி.எல்.சி (ஏபி மவுரி) ஈஸ்ட் உற்பத்தியில் 750 கோடி முதலீடு செய்ய உள்ளது
4. கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் துறையும் 200 கோடியை செய்ய உள்ளது டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம்
5. வெலிக்ஸ் (ஜெர்மனி) காலணி உற்பத்தி பிரிவில் 300 கோடி முதலீடு செய்ய உள்ளது
6. சூர்யா குளோபல் ஃப்ளெக்ஸி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் உத்திர பிரதேசத்தில் முதலிடு செய்ய உள்ளது.
மேலும் படிக்க | இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். ட்ரோன்... விரட்டி அடித்த இந்திய பாதுகாவல் படை..!!
கடந்த 6 மாதங்களில் உத்தரபிரதேசத்தின் தொழில்துறை மேம்பாட்டு அதிகாரிகள் சுமார் 426 ஏக்கர் நிலங்களை முதலீட்டு திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக அலோக் டாண்டன் தெரிவித்தார். இதில் சுமார் ரூ .6,700 கோடி முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1,35,362 பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் முதலீட்டை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்களை அளித்து, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கூடுதல் தலைமைச் செயலாளர் அலோக் குமார், தொழில்துறை துறை 52 நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது என்றார்.
கோவிட் -19 (COVID-19) நெருக்கடியின் போது பல தொழில்துறை கொள்கைகள் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 6 மாதங்களில், 676 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் ஒற்றை சாளர போர்ட்டலான 'நிவேஷ் மித்ரா'வை செயல்படுத்தியது மாநில அரசு மேற்கொண்ட முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாகும், இதன் மூலம் தொழில்முனைவோருக்கு , சுமார் 166 சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க | SAI: இந்திய ராணுவ வீரர்களுக்கான பிரத்யேக app அறிமுகம்!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR