வருமான வரி கணக்கு: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி நெருங்கிவிட்டது. இந்த முறை ஜூலை 31 -க்குள் உங்கள் ITR ஐ தாக்கல் செய்யலாம். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, நீங்கள் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா அல்லது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பழைய வரி விதிப்பின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிஏ அல்லது முகவரின் உதவி தேவைப்படாது
இந்த விவரங்கள் அனைத்தும் தெரிந்த பிறகும் கூட, மக்கள் பெரும்பாலும் ஐடிஆர் தாக்கல் செய்ய சிஏ அல்லது ஏஜென்ட்டின் உதவியை நாடுகிறார்கள். ஐடிஆர் தாக்கல் செய்யும் பணியை மக்கள் மிகவும் கடினமாகக் கருதுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் டென்ஷன் எடுப்பதை விட சி.ஏ-க்கு பணம் கொடுப்பதே மேல் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும், அனைவரும் எளிதாக தாங்களாகவே ஐடிஆர் தாக்கல் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள்
சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி ஐடிஆர் தாக்கல் செய்தால், சிஏ அல்லது முகவருக்கு ஆகும் செலவைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு முறையும் போலவே, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளை வருமான வரித்துறை கூறியுள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் எளிதாக ஐடிஆர் தாக்கல் செய்யலாம். எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | SBI Locker Rules: வங்கி லாக்கர் தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்கள்!
ஐடிஆர் -ஐ ஆன்லைனில் இப்படி தாக்கல் செய்யுங்கள்:
- முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற வலைதளத்துக்குச் செல்லவும்.
- உங்கள் PAN தான் உங்கள் பயனர் ஐடி. அதை வைத்து லாக் இன் செய்யவும். நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதை மீட்டமைக்கவும் (ரீ-செட் செய்யவும்).
- 'டவுண்லோட்’ -க்குச் சென்று தொடர்புடைய ஆண்டின் கீழ் ITR-1 (Sahaj) Return Preparation Software என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது எக்செல் வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.
- எக்செல் ஷீட்டைத் திறந்து, படிவம்-16 இல் இணைக்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும்.
- அனைத்து விவரங்களையும் கணக்கிட்டு இந்தத் தாளைச் சேவ் செய்யவும்.
- 'சப்மிட் ரிட்டர்ன்' என்பதற்குச் சென்று சேவ் செய்த எக்செல் ஷீட்டைப் பதிவேற்றவும்.
- டிஜிட்டல் கையொப்பத்தைப் பதிவேற்றும்படி கேட்கப்படுவீர்கள். இந்த ஸ்டெப்பை நீங்கள் வேண்டுமானால் ஸ்கிப் செய்யலாம்.
- வெற்றிகரமான மின்-தாக்கல் சமர்ப்பிப்பு (Successful e-filing Submission) செய்தி உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
- ITR சரிபார்ப்பு படிவம் (ITR Verification Form) உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.
ஐடிஆர் சரிபார்ப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- இன்கம் டேக்ஸ் இண்டியாவின் இணையதளமான https://portal.incometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome... இல் லாக் இன் செய்யவும்.
- 'View Returns/ Forms' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஈ-ஃபைல் செய்யப்பட்ட ஐடிஆரைப் பார்க்கவும்.
2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2023 ஆகும். அபராதத்தைத் தவிர்க்க விரும்பும் வரி செலுத்தும் தனி நபர்கள், தங்கள் ஐடிஆர் -ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பயனர்கள் தங்கள் வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்யலாம். எனினும் கடந்த வருடத்தை விட இம்முறை திணைக்களத்தினால் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் தனி நபர்கள் இந்த மாற்றங்களை பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஐடிஆர் படிவத்துடன் தொடர்புடைய மாற்றங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ