இந்தியாவின் திருமணச் செலவும் GDP விகிதமும் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். இந்தியாவில் திருமணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ₹10 லட்சம் கோடி செலவாகிறது என தரவுகள் கூறுகின்றன. திருமணத்திற்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் கணக்காக இருக்கிறது.
இந்தியாவில் திருமண சந்தை ₹10 லட்சம் கோடி
திருமணத்திற்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் திருமணம் என்பது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாகவும் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் விஷயமாக இருப்பதால், கல்யாணத்திற்கான செலவை கணக்குப் பார்க்கக்கூடாது என்று எண்ணுகின்றனர்.
அதிலும் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை பிரமாண்டமாக கொண்டாடும் வழக்கம் இந்தியாவில் இருந்துவருகிறது. காலத்திற்கு ஏற்றாற்போல திருமணங்கள் செய்யும் முறையும், சடங்கு சம்பிரதாயங்களும் மாறிவரும் நிலையில் இப்போது சராசரியாக ஒரு இந்தியக் குடும்பம், திருமணத்திற்காக12 லட்சம் ரூபாய் செலவழிக்கிறது.
ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு இது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றும் விஷயம் என்றால், பொருளாதார ரீதியாக பார்க்கும்போது, இந்தியாவின் சராசரி குடும்ப ஆண்டு வருமானமான ரூ.4 லட்சத்தை விட 3 மடங்கு அதிகம் என புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 மடங்கு அதிகமாக ஒரு திருமணத்திற்கான செலவுகள் இருக்கின்றன.
இந்தியாவின் திருமணங்கள்
இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் முதல் 1 கோடி திருமணங்கள் நடைபெறுவதாக தரவுகள் கூறுகின்றன. உலகின் மிகப்பெரிய திருமண இடமாக அறியப்படும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 80 லட்சம் முதல் 1 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன என்று உலகத் தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின் (global brokerage Jefferies) ஆய்வு கூறுகிறது.
மேலும் படிக்க | இந்த நாடுகளுக்கு இந்திய பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் செல்ல முடியும்!
திருமணச் சந்தையின் அளவு
2024-2025 நிதியாண்டில், இந்திய திருமணச் சந்தை $130 பில்லியன் (சுமார் ரூ. 10 லட்சம் கோடி) என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது இந்திய திருமணச் சந்தையானது, மொத்த $681 பில்லியன் உணவு மற்றும் மளிகைத் துறை சில்லறை விற்பனை சந்தைக்கு அடுத்தபடியாக உள்ளது.
ஜிடிபி விகிதத்தில் திருமண செலவு
ஜிடிபி விகிதத்தில் இந்தியாவின் திருமணச் செலவு மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் திருமணங்கள் ஆழமான கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் அதிக செலவு பிடிப்பது. பொதுவாக, கடன் வாங்கியாவது திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பிறந்ததுமே திருமணத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்ட மக்கள், வருமானத்தை மீறி திருமணத்திற்காக செலவு செய்ய தயங்குவதில்லை.
திருமணச் செலவு வகைகள்
நகைகள், ஆடைகள், நிகழ்வு மேலாண்மை, கேட்டரிங், பொழுதுபோக்கு போன்ற பலதரப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய திருமணம் தொடர்பான செலவு ஆண்டுக்கு $130 பில்லியன் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவின் திருமண சந்தை அமெரிக்காவை விட இரண்டு மடங்கு அதிகம்
ஜெஃப்ரிஸின் கூற்றுப்படி, இந்தியாவின் திருமணச் சந்தை அமெரிக்காவின் ($70 பில்லியன்) ஐ விட இருமடங்காகும், ஆனால் சீனாவின் திருமணச் சந்தை ($170 பில்லியன்) இந்தியாவின் திருமணச் சந்தையை விட பெரிதாக உள்ளது.
மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்! 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தில் தள்ளுபடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ