World's TOP CEOs: எலான் மஸ்க், சுந்தர் பிச்சையை பின்னிக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி!

World's TOP CEO's: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா, டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 5, 2024, 07:28 PM IST
  • பிராண்ட் கார்டியன்சிப் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த நிர்வாக அதிகாரிகளுக்கான தரவரிசை பட்டியல்.
  • முதலிடம் பிடித்துள்ள டென்சென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாடெங் மா.
  • பிராண்ட் கார்டியன்ஷிப் இண்டெக்ஸ் பட்டியலில் உள்ள இந்தியர்கள்.
World's TOP CEOs: எலான் மஸ்க், சுந்தர் பிச்சையை பின்னிக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி! title=

World's TOP CEO's: வணிகத்தை விரிவுபடுத்தும் அதே நேரத்தில் சமூகப் பொறுப்புகளை புரிந்து கொண்டு வணிகம் செய்வது தான் சிறந்த வணிக யுத்தியாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்களின் நலன்களை புரிந்து கொண்டு செயல்படுவது என்பதும் நல்ல திறமை வாய்ந்த நிர்வாகியின் அம்சமாகும். இது போன்ற திறன்களை பெற்ற, தலைமை நிர்வாக அதிகாரிகளை மதிப்பீடு செய்து பிராண்ட் கார்டியன்சிப் இண்டெக்ஸ் (BRAND GUARDIANSHIP INDEX 2024) பட்டியலை வெளியிட்டுள்ளது. பிராண்ட் பைனான்ஸ் சர்வே என்னும் இந்த மதிப்பீட்டில், உலக அளவில் சமூகப் பொறுப்புடன் வணிக நலனை கருத்தில் கொண்டு செயல்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் உலக அளவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரி என்னும் CEOக்களின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ள இந்தியா

தலைமை நிர்வாக அதிகாரிகளின் தர வரிசை பட்டியலில், இந்தியா வர்த்தக உலகில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஆன முகேஷ் அம்பானி, 2024 ஆம் ஆண்டுக்கான பிராண்ட் கார்டியன்சிப் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த நிர்வாக அதிகாரிகளுக்கான தரவரிசை பட்டியலில், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சென்ற ஆண்டும் அவர் இரண்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நதெள்ளா, கூகுள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவிலான பட்டியலில் முதலிடம் வகித்துள்ளார்.

முதலிடம் பிடித்துள்ள டென்சென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாடெங் மா

பிராண்ட் கார்டியன்சிப் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் டென்சென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாடெங் மா (Tencent CEO Huateng Ma) 81.6 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான முகேஷ் அம்பானி 80.3 புள்ளிகள் பெற்று உலக அளவில் இரண்டாவது இடத்தையும், இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் முதலிடம் பெற்றுள்ள ஹுவாடெங் மா என்பவரை விட வெறும் ஒன்று. மூன்று புள்ளிகள் மட்டுமே குறைவு. எனவே இவர் விரைவில் முதலிடத்தை பிடித்து வடுவார் என்று நம்பப்படுகிறது ஏனெனில் அவர் தனது தொழிலை மிக வேகமாக விரிவுபடுத்தி வருகிறார்.

மேலும் படிக்க | தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டை நிரூபிக்கும் தரவுகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தனது செயல்பாட்டின் மூலம் இதனை பல்வேறு வகையில் நிரூபித்துள்ளார். கடந்த அக்டோபர் டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 9.3 % அதிகரித்து ரூ.17,275 கோடியாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூபாய் இரண்டு. இரண்டு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் மிக வேகமாக முன்னேறி வருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

பிராண்ட் கார்டியன்ஷிப் இண்டெக்ஸ் பட்டியலில் உள்ள மற்ற இந்தியர்கள்

பிராண்ட் கார்டியன்ஷிப் இண்டெக்ஸ் (Brand Guardianship Index) பட்டியலில் உள்ள மற்ற இந்தியர்களில் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, என் சந்திரசேகரன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதற்கு முந்தையா ஆண்டின் தர வரிசையில் சந்திரசேகரன் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் அவர் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் அனிஷ் ஷா ஆறாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இன்போசிஸ் நிறுவனத்தின் சலீல் பாரேக் 16 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News