ஆதார் கார்ட் கொண்டு UPI-ஐ ஆக்டிவேட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ

Activate UPI with Aadhaar Card: PhonePe கட்டணப் பயன்பாடானது, ஆதார் அட்டை அடிப்படையிலான ஒரு முறை கடவுச்சொல் (OTP) அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) செயல்படுத்தும் வசதியை அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2022, 07:10 PM IST
  • யுபிஐ ஆக்டிவேட் செய்ய வேண்டுமா?
  • வங்கிக்கணக்கு இல்லாமலும் இனி செய்யலாம்.
  • போன்பே இதற்கான வசதியை அளிக்கின்றது.
ஆதார் கார்ட் கொண்டு UPI-ஐ ஆக்டிவேட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ title=

UPI-ஐ ஆக்டிவேட் செய்ய வங்கி கணக்கு எண், மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு ஆகியவை தேவை. ஆனால் இப்போது ஆதார் அட்டையின் உதவியுடன் UPI ஐ செயல்படுத்தலாம். PhonePe கட்டணப் பயன்பாடானது, ஆதார் அட்டை அடிப்படையிலான ஒரு முறை கடவுச்சொல் (OTP) அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) செயல்படுத்தும் வசதியை அளித்துள்ளது. 

UPI ஆக்டிவேஷன் வரம்பு

இதுவரை, ஒரு வாடிக்கையாளர் UPI பயன்பாட்டில் பதிவு செய்யும் போது பின் செட் செய்ய OTP அங்கீகாரத்திற்காக செல்லுபடியாகும் டெபிட் கார்டு எண்ணை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இந்த செயல்முறை டெபிட் கார்ட் இல்லாத பல வங்கி வாடிக்கையாளர்களின் அணுகலை தடை செய்யும் விதத்தில் இருந்தது. இது போன் பே-வின் ஒரு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய PhonePe ஆதார் அங்கீகாரம் எவ்வாறு உதவும்?

இந்த வசதி மக்களுக்கு உதவும் என்றும், UPI வசதியை எளிதாகப் பெறலாம் என்றும் PhonePe தெரிவித்துள்ளது. UPI உடன் ஆதாரை இணைப்பது இந்த தடையை நீக்கும் என்று பேமெண்ட் சிஸ்டம் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் வசதி மற்றும் பலன்களை அனுபவிக்கவும் இது உதவியாக இருக்கும்.

PhonePe பயனர்களுக்கான ஆதார் e-KYC ஆப்ஷன்

ஆதார் e-KYC விருப்பம் இப்போது PhonePe பயன்பாட்டில் UPI ஆன்போர்டிங்கின் ஒரு பகுதியாக இருக்கும். பயனர்கள் அதைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். OTP ஐ எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ 

ஆதார் OTP ஐப் பயன்படுத்தி UPI ஆக்டிவேட் செய்யலாம்

ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பும் PhonePe பயனர்கள், ஆன்போர்டிங் செயல்முறையைத் தொடங்க, தங்கள் ஆதார் எண்ணின் கடைசி ஆறு இலக்கங்களை உள்ளிட வேண்டும்.

பின்னர், அங்கீகார செயல்முறையை முடிக்க, அவர்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் அவர்களது வங்கியிலிருந்து OTP பெறுவார்கள். அதன்பிறகு, வாடிக்கையாளர்கள் PhonePe பயன்பாட்டில் பணம் செலுத்துதல் மற்றும் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் போன்ற அனைத்து UPI அம்சங்களையும் அணுகலாம்.

ஆதார் அட்டையை மொபைல் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும்

இந்த வசதியைப் பயன்படுத்த, உங்கள் ஆதார் அட்டை எண்ணை உங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News