கோடையில், மக்கள் பெரும்பாலும் அடிக்கடி உஷ்ணம், வறண்ட சருமம் மற்றும் உணவு செரிக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை அதிகமாக சந்திக்கின்றனர். வெயில் மற்றும் சூடு அதிகரிக்கும் போது, உடலின் வெப்பமும் கூடுகிறது. அதன் விளைவு நேரடியாக தோலில் தெரிகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், கோடையில் அஜீரண பிரச்சனையும் தொடங்குகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பசியின்மை ஏற்பட்டு, அவர்கள் உணவைத் தவிர்க்கிறார்கள். இது மட்டுமின்றி, கடும் வெயிலில் வெளியே செல்லும் போது, வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. இதனால் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன.
மக்கள் இந்த அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விலகி இருக்க பல்வேறு வழிகளை பின்பற்றுகிறார்கள். பல்வேறு இயற்கையான உணவுகள் இதில் நமக்கு பயனளிக்கும். அதில் புதினாவும் ஒன்றாகும்.
வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எளிதாகவும் விரைவாகவும் சரி செய்ய புதினா உதவுகிறது. புதினா இலைகளில் பல வித சத்துக்கள் உள்ளன. இவை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. பெரும்பாலான மக்கள் புதினாவை விரும்புகிறார்கள், அதை தங்கள் உணவில் சேர்க்க விரும்புகிறார்கள். புதினா உணவின் சுவையை அதிகரிக்கிறது. மிகவும் நல்ல வாசனையை கொண்ட புதினா சுவையிலும் குறைந்ததல்ல. ஆனால், சிலருக்கு புதினா பிடிப்பதில்லை. எனினும், அவர்களும் புதினாவின் நன்மைகள் பற்றி தெரிந்தால், புதினாவை உட்கொள்ளத் தொடங்குவார்கள்.
புதினா நம் வயிறு, தோல் மற்றும் வாய்க்கு நன்மை பயக்கும் ஒரு பொருளாகும். அனைவரும் கண்டிப்பாக புதினாவை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாவின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது:
பெரும்பாலும் வெளியே இருக்கும்போது, நாம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட தயங்குவதுண்டு. ஏனெனில் வெங்காயம் சாப்பிட்டால் உடனே வாயில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், புதினா இலைகள் இந்த துர்நாற்றத்தை அகற்றும். புதினா இலைகள் மிகவும் வலுவான நறுமணத்தைக் கொண்டுள்ளன. இவை உங்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு துர்நாற்றத்தையும் நீக்குகிறது. வாய் துர்நாற்றம் அகல சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து அந்த நீரை கொப்பளிக்கலாம்.
முகத்தை குளிர்விக்கிறது:
கோடை காலத்தில் சருமம் மிகவும் தளர்வாகவும் சோர்வாகவும் இருக்கும். இது பெரும்பாலும் கோடை வெப்பநிலை காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட நேரத்தில், முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்கு புதினா இலைகளை அரைத்து முகம் முழுவதும் நன்றாக தடவினால், சருமம் நன்றாக இருப்பதோடு, முகமும் குளிர்ச்சி பெறும்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்தை வேரறுக்கும் கொடூர அரக்கன் பிளாஸ்டிக்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு
வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது:
கோடையில், வலுவான சூரிய ஒளியால் ஏற்படும் வெயில் காரணமாக மக்கள் அடிக்கடி ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக பலர் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
புதினா இலைகள் வெப்ப பக்கவாதத்தைத் தவிர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் புதினா இலைகளில் உள்ள பல கூறுகள் வெப்ப பக்கவாதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. புதினா சாறு குடித்து உஷ்ணத்தைத் தவிர்க்கலாம்.
உணவை ஜீரணிக்க உதவுகிறது:
கோடையில் உணவு சீக்கிரம் ஜீரணமாகாது. இதனால் மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க, புதினா உதவும். ஏனெனில் புதினா இலைகள் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். சில புதினா இலைகளை அரைத்து, வெங்காய சாறு மற்றும் 1 எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த பானத்தை குடித்தால், அது உங்கள் உணவை விரைவாக ஜீரணிக்க உதவும்.
வாந்தி சங்கடத்தை சரி செய்கிறது:
கோடையில் வாயு அல்லது வெளி உணவு காரணமாக அடிக்கடி வாந்தி பிரச்சனை தொடங்குகிறது. வாந்தி நிற்க புதினா இலையின் சாறு குடித்து வந்தால் உடனே வாந்தி நிற்கும். புதினா, வாந்தி சங்கடத்தை நீக்க மிக நல்ல நிவாரணமாக இருக்கும்.
மேலும் படிக்க | மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பாதுகாக்க இந்த எண்ணெய் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR