தூக்கம் ஏற்படும்போதோ, தூக்கத்தின்போதோ ஏற்படும் குறைபாடுகளை, தூக்கக் கோளாறுகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கக் கோளறுகளை குணப்படுத்த முடியும் என்றாலும், ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் அதாவது ஒன்றரை மணி நேரம் தாமதமாக தூங்குவது என்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கக் குறைவு என்பது இரத்த நாளங்களை வரிசைப்படுத்தும் செல்களை சேதப்படுத்தும் என்றும், மோசமான தூக்கம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு என்பதால், இந்த ஆபத்து பெண்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தூக்கப் பிரச்னை மற்றும் இதர உடல் உபாதைகள் ஏற்பட முக்கிய காரணம் மாறிய வாழ்க்கைமுறை, குறட்டை (Snoring) என்று நம்பப்படுகிறது. குறிப்பாக இரவில் வேலை செய்ப்வர்கள் பலகாலம் தொடர்ந்து இரவில் வேலை செய்தால், இதய நோய், மார்பகப் புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஜீரணப் பகுதிகளில் கோளாறுகள் போன்றவை ஏற்படும். மனநலக் கோளாறுகள் வரும் வாய்ப்பும் அதிகமாகும் என்பதோடு, தூக்கத்தின் தரம் பெரிதும் பாதிக்கப்படும்.
நாள்பட்ட தூக்கமின்மை பிற்காலத்தில் இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சொல்லும் இந்த ஆய்வு, போதுமான அளவு உறங்குபவர்களைவிட, நீண்ட காலமாக குறைவான நேரம் மட்டுமே உறங்குபவர்களுக்கு வாழ்க்கையில் பிற்பகுதியில் இதய நோய்கள் அதிகம் என்று கண்டறிந்துள்ளது.
மேலும் படிக்க | ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா; ‘இவற்றை’ இரவில் சாப்பிடக் கூடாது!
சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் (journal Scientific Reports) வெளியிடப்பட்ட பெண்களைப் பற்றிய புதிய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு, தூக்கத்தில் லேசான குறைவு இருந்தாலும், அது நீண்ட நாளாக தொடர்ந்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்குகிறது.
ஆறு வாரங்கள் குறைந்த நேரம் தூங்கியவர்களின் உடலில் உள்ள இரத்த நாளங்களை வரிசைப்படுத்தும் செல்கள் சேதமடைந்துள்ளன. இதுவே, போதுமான அளவு தூங்குவதால், நன்கு ஓய்வெடுத்த செல்களுக்கு ஒப்பீட்டளவில் ஆக்ஸிஜனேற்றம் போதுமான அளவு உள்ளது.
"லேசான நாள்பட்ட தூக்கக் குறைபாடுகள் இதய நோயை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்ட இதுவே முதல் நேரடி ஆதாரம் என்று கொலம்பியாவில் உள்ள தூக்க மருத்துவ மையத்தின் இயக்குனரான ஆய்வுத் தலைவர் சஞ்சா ஜெலிக் கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்விற்காக கிட்டத்தட்ட 1,000 பெண்களை பரிசோதித்தனர், 12 வார ஆய்வை முடிக்கக்கூடிய ஒவ்வொரு இரவும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கும் 35 ஆரோக்கியமான பெண்களையும் இந்த ஆய்வில் சேர்த்துக் கொண்டனர்.
மேலும் படிக்க | குறட்டையை அடியோடு போக்க சில வழிகள்... இதை பாருங்க!
இந்த ஆய்வில் கலந்துக் கொண்ட பெண்கள் ஆறு வாரங்கள் தங்கள் வழக்கமான வழக்கப்படி தூங்கினர்; அடுத்த் ஆறு வாரங்களுக்கு, வழக்கத்தை விட 1.5 மணி நேரம் தாமதமாக படுக்கைக்குச் சென்றனர். ஆய்வில் கலந்துக் கொண்ட பெண்களின் உறக்கம் மணிக்கட்டில் அணிந்திருக்கும் ஸ்லீப் டிராக்கர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது.
"ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்கினால் பல நோய்கள் வராது" என்று ஜெலிக் கூறினார். உலகளவில் 10 சதவிகிதம் பேர் தூக்கமின்மையாலும் (Insomnia), 20 சதவிகிதம் பேர் அடிக்கடி தூக்கமின்மை பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர்.
ஜெலிக் தலைமையிலான குழு, படுக்கை நேர மாறுபாடு வாஸ்குலர் செல்களை நாள்பட்ட, ஆனால் வழக்கமான, குறுகிய தூக்கத்தைப் போலவே பாதிக்கிறதா என்ற ஆய்வையும் மேற்கொள்ளவிருக்கிறது.
ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்ற கேள்விக்கு, வயதுக்கு ஏற்ப உறக்கம் தேவை என்பது முக்கியமான விஷயமாகும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தூக்க நேரம் என்பது பொதுப்படையானது என்றாலும், அதை தெரிந்து வைத்துக் கொண்டு பின்பற்றுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மேலும் படிக்க | கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
3 மாதம் வரையுள்ள குழந்தைகள்: 14 - 17 மணிநேரம்
4 - 12 மாதம் வரையுள்ள குழந்தைகள்:12 - 16 மணிநேரம்
1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள்: 11 - 14 மணிநேரம்
3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள்: 10 - 13 மணிநேரம்
6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள்: 9 - 12 மணிநேரம்
13 - 18 வயது வரையுள்ளவர்கள்: 8 - 10 மணிநேரம்
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 - 9 மணிநேரம்
இந்த அளவு நேரம் தினசரி தூங்கினாலும், உங்கள் உறக்கம் தரமானதாக இருக்கிறதா என்பதும் முக்கியமானது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட்வை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | மூளை சுறுசுறுப்பாக இருக்க... பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ