வேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க

Weight Loss Tips: தொப்பை கொழுப்பு, உடல் எடை ஆகியவை நமது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வித உடல் உபாதைகளையும் உண்டாக்குகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 21, 2024, 01:04 PM IST
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • போதுமான தூக்கம் வேண்டும்.
  • உடல் செயல்பாடுகள் மிக அவசியம்.
வேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க title=

Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தி வரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால் அதை குறைக்க பல வித நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதிகரிக்கும் உடல் பருமன் இன்று அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

தொப்பை கொழுப்பு (Belly Fat), உடல் எடை ஆகியவை நமது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வித உடல் உபாதைகளையும் உண்டாக்குகின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும், உடல் எடையை குறைக்கலாம். நமது வாழ்க்கைமுறையில் சில பழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிப்பதும், சில பழக்கங்களை தவிர்ப்பதும் இதற்கு அவசியம்.

உடல் எடையை குறைக்க உதவும் சில பயனுள்ள வழிகள்

கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்:

எடை இழப்புக்கு (Weight Loss) கலோரி உட்கொள்ளளை குறைக்க வேண்டியது அவசியமாகும். ஆகையால், எடையை குறைக்க நினைப்பவர்கள் குறைந்த கலோரி உணவுகளை (Low Calorie Foods) உட்கொள்ள வேண்டும். குறைவான கலோரிகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

புரதச்சத்தை சேர்த்துக்கொள்ள வெண்டும்: 

அன்றாட டயட்டில் குறைந்தபட்சம் 20 கிராம் புரதச்சத்து (Proteins) இருப்பது அவசியமாகும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில், புரதச்சத்து மிகவும் அவசியம். இது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றது. எடை இழப்புக்காக நாம் எடுக்கும் முயற்சிகள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

உடல் செயல்பாடுகள் மிக அவசியம்:

உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடுகள் மிக அவசியம். தினமும் குறைந்தது 1/2 மணி நேரமாவது உடற்பயிற்சி (Exercise), நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகானசம் என ஏதாவது ஒன்றை செய்வது மிக அவசியமாகும். இது தவிர வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலை போன்ற வீட்டு வேலைகளும் உடல் எடையை குறைக்க வெகுவாக உதவும். 

மேலும் படிக்க | கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!

போதுமான தூக்கம்:

தூக்கம் (Sleep) உடல் எடையுடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. உடல் பருமனை குறைக்க, தினமும் 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டியது மிக அவசியம். தூக்கமின்மையால், கார்டிசோல் ஹார்மோன் உடலில் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் பசி அதிகரிக்கின்றது. இரவில் உண்ணும் உணவு ஜீரணம் ஆகாமல் கொழுப்பாக மாறுகிறது. நல்ல உறக்கம் வளர்சிதை மாற்றத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:

போதுமான அளவு தண்ணீரை (Water) உட்கொள்வது பசியைப் போக்கும். இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி, தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஒவ்வொரு நபரும் தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News