சீரகம் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை: பக்க விளைவுகளின் பட்டியல் இதோ!!

Cumin Seeds Side Effects: எதுவும் அளவுக்கு மீறினால் ஆபத்துதானே! சீரகத்தையும் அதிகம் உட்கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சீரகத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 19, 2023, 05:49 PM IST
  • சீரகத்தை அதிகமாக உட்கொள்வதால், மார்பில் எரியும் உணர்வு, எரிச்சல் பிரச்சனை ஏற்படுகின்றது.
  • இதனுடன் செரிமான பிரச்சனைகளும் தொடங்கும்.
  • ஆகையால் இதனை குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.
சீரகம் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை: பக்க விளைவுகளின் பட்டியல் இதோ!!  title=

ஜீரகத்தின் பக்க விளைவுகள்: சீரகம் இந்திய சமையலறைகளில் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொருளாகும். இது உணவை மென்மையாக்க பயன்படுகிறது. சீரகத்தின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இது காய்கறிகளின் சுவையை அதிகரிக்கவும், மேன்மையாக்கவும் பயன்படுகின்றது. சுவையை தவிர, சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சீரகத்தை உட்கொள்வதால் ஜீரண சக்தி மிகவும் வலுவடைகிறது. ஆனால் எதுவும் அளவுக்கு மீறினால் ஆபத்துதானே! சீரகத்தையும் அதிகம் உட்கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சீரகத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

1. நெஞ்செரிச்சல்

சீரகத்தை அதிகமாக உட்கொள்வதால், மார்பில் எரியும் உணர்வு, எரிச்சல் பிரச்சனை ஏற்படுகின்றது. இதனுடன் செரிமான பிரச்சனைகளும் தொடங்கும். ஆகையால் இதனை குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும். 

2. கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்

சீரகத்தை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். கண்டிப்பாக, சீரகத்தை குறைவாக உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் நம் உடலுக்கு வடிகட்டியாக செயல்படும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

மேலும் படிக்க | Protein Quality: இந்தியர்களின் உணவில் தரமான புரதம் இல்லையா? என்ன சொல்றீங்க?

3. ஏப்பம் வரும் பிரச்சனை

சீரகத்தை அதிகமாக உட்கொண்டால் ஏப்பம் வரும். ஏப்பம் வருவதால் உங்கள் குடல் மற்றும் வயிற்றில் தேங்கியிருக்கும் வாயு வெளியேறுகிறது. ஏப்பம் வருவதால் அந்த நபருக்கு பிரச்சனை ஏற்படுவதுடன், சுற்றி இருப்பவர்களும் விசித்திரமாக உணர்வு ஏற்படுகின்றது. 

4. சர்க்கரை அளவு குறைகிறது

சீரகத்தை அதிகமாக உட்கொள்வதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலில் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் தொடீரென உடல் சர்க்கரை அளவு குறைந்தால், சிலருக்கு மயக்கம் போன்ற பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.

5. கருச்சிதைவு ஏற்படும் அபாயம்

கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிக அளவில்  எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

6. அதிக ரத்த போக்கு

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். எனவே அந்த சமயங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Beauty Tips! முக சுருக்கங்களை முற்றிலும் நீக்கும் ‘வாழைப்பழ’ பேஸ் பேக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News