Knowledge News: நமது வயிறு ஒரு முழு பிளேடை ஜீரணிக்கும்! எப்படி? இப்படித்தான்…

நமது வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன, உணவை ஜீரணிக்கும் அந்த அமிலங்கள் கூர்மையான பிளேடையும் சிறிது நேரத்தில் கரைந்துவிடும் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 29, 2021, 04:19 PM IST
  • மனித உடலில் சுரக்கும் அமிலங்கள்
  • உணவை செரிமாணம் செய்கின்றன
  • உணவை செரிமாணம் செய்யும் அமிலம், ஒரு முழு பிளேடையே 2 மணி நேரத்தில் கரைந்துவிடும்
Knowledge News: நமது வயிறு ஒரு முழு பிளேடை ஜீரணிக்கும்! எப்படி? இப்படித்தான்… title=

நமது வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன, அவைதான் நாம் சாப்பிடும் பொருட்கள் செரிமாணம் ஆகின்றன. உணவை ஜீரணிக்கும் அமிலங்கள் கூர்மையான பிளேடையும் சிறிது நேரத்தில் கரைந்துவிடும். அதிர்ச்சியாக இருக்கிறதா? 

ஆனால் இது உண்மைதான்.  மனித உடல் அதிசயமானது. உடல் நமதாக இருந்தாலும், அதற்குள் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்கே தெரியாது. நாம் உறங்கினாலும் சரி, விழித்துக் கொண்டிருந்தாலும் சரி, நமது உடலுறுப்புகள், தன்னிச்சையாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

அதேபோல, நமது உடலின் சக்தி அல்லது திறன் என்ன என்பதும் நமக்கே தெரியாது. நமது வயிறும், ஒரு பிளேடைக் கூட ஜீரணிக்கக்கூடியது என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இதுவே வெளிப்புற உடலில் பட்டால், காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்.  

நமது உடலுக்கு காயத்தையும் வலியையும் ஏற்படுத்தும் கூர்மையான பிளேடையே மனித உடலில் உள்ள அமிலம் உருக்குகிறது. நமது வயிற்றில் உருவாகும் அமிலம் PM என்ற அளவையில் 1 முதல் 14 வரை அளவிடப்படுகிறது. குறைந்த pH அளவுள்ள அமிலம், மிகவும் கடுமையானது. மனித வயிற்றில் இருக்கும் இந்த அமிலம் பொதுவாக 1.0 முதல் 2.0 pH வரை இருக்கும், 

Also Read | இளமையிலேயே பக்கவாதம் வரக் காரணம் இதுதான்!  

Gastrointestinal Endoscopy இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மனித வயிற்றில் காணப்படும் அமிலம் கூர்மையான பிளேடையும் எளிதில் கரைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு பிளைடை கரைக்க 2 மணி நேரம் மட்டுமே ஆகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வயிற்றில் உருவாகும் கடுமையான இந்த அமிலமானது, வெறும் 2 மணி நேரத்தில் பிளேடை கரைத்துவிடும் அளவுக்கு வலிமையானது. அதாவது இரும்பினால் செய்யப்பட்ட பிளேடு 2 மணி நேரத்தில் வயிற்றில் உருவாகும் அமிலத்தில் கரையும். ஆனால், இந்த அமிலத்தால் மனித உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் வாயில் இருந்து வயிறு வரை செல்லும்போது, உணவுப்பாதையில் அந்த கூர்மையான பிளேடு ஏற்படுத்தும் சேதமானது, உயிரையே குடித்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மனித உடலில் இருந்து உயிரை எடுக்கும் வலிமை கொண்ட அமிலம், நமது வயிற்றில் இருந்தாலும், அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், உடலில் ஒரு துளிபட்டால் காயம் ஏற்படுத்தும் பிளேடு, வயிற்றுக்குள் சென்றால், அந்த பிளேடை கரைத்து ஸ்வாஹா செய்துவிடுகிறது அமிலம். 

இருக்கும் இடத்தை பொறுத்து தான் எந்தவொரு பொருளின் செயல்திறனும் மாறுபடும் என்பதை இது உணர்த்துகிறது.

Also Read | நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News