ஆரோக்கியமான உடலுக்கு... வெறும் வயிற்றில் ஊற வைத்த பேரீச்சம்பழம் ஒன்றே போதும்

Eating Soaked Dates in Empty Stomach: ஊற வைத்த பேரீச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் இரட்டிப்பாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து ஆகியவை அடங்கிய பேரீச்சம் பழம், உடலை பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 2, 2025, 09:01 PM IST
  • உடனடி ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பேரிச்சம்பழம்.
  • பேரிச்சம் பழத்தில், குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன.
  • எலும்புகளை வலுவலுக்கும் பேரிச்சம்பழம்.
ஆரோக்கியமான உடலுக்கு... வெறும் வயிற்றில் ஊற வைத்த பேரீச்சம்பழம் ஒன்றே போதும் title=

பேரீச்சம்பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு அருமையான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. பேரீச்சம் பழத்தை ஊற வைத்து, வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் இரட்டிப்பாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து ஆகியவை அடங்கிய பேரீச்சம் பழம், உடலை பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. 23 கல்லூரிகளில் கொண்ட பேரீச்சம் பழத்தில், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்துள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக இதனை சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், எலும்புகளை வலுப்படுத்துதல் என இதன் ஆரோக்கிய நன்மைகளை பெரிதாக  பட்டியலிடலாம். இந்நிலையில், ஊற வைத்த பேரீச்சம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை (Health Tips) விரிவாக அறிந்து கொள்ளலாம்.

உடனடி ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பேரிச்சம்பழம்

பேரிச்சம் பழத்தில், குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் சோர்வு பலவீனத்தை நீக்கி, ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது நான்கு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் போதும். சோர்வு பலவீனம் அனைத்தையும் நீக்கி ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்

கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பேரிச்சம்பழம் நோய் எதிர்ப்பு வியக்கத்தக்க வகையில் அதிகரிக்கிறது. இதனால் காலையில் பேரிச்சம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டு, தொற்று நோய்களிலிருந்து உடல் பாதுகாக்கப்படுவதோடு, சளி காய்ச்சல் போன்றவை அடிக்கடி ஏற்படாமல் இருக்கும்.

மேலும் படிக்க | உங்கள் குழந்தை ஆக்டிவாக இல்லையா? ‘இந்த’ யோகாசனங்கள் செய்தால் சுட்டியா மாறிடுவாங்க

எலும்புகளை வலுவவாக்கும் பேரிச்சம்பழம்

எலும்புகளை வலுவாக்க தேவையான கால்சியம் சத்து மட்டுமல்லாமல், பிரசத்து, செலினியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் பலவீனமான எலும்புகளும் வலுவாகும். இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளின் வளர் சிதை மாற்றத்திற்கு உதவி, அதனை வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மருந்தாகும் பேரிச்சம்பழம்

மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு, பேரிச்சம்பழம் ஒரு வரம் ஆகும். இது போன்ற பிரச்சனை உள்ள பெண்கள், தொடர்ந்து வெறும் வயிற்றில் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்த சோகை மருந்தாகும் பேரிச்சம்பழம் 

ரத்த சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், சோர்வு பலவீனம் ஆகியவை அதிகம் இருக்கும் இந்நிலையில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பேரீச்சம் பழத்தை சாப்பிடும் சரியான முறை

பேரீச்சம் பழத்தை பலர் அப்படியே சாப்பிடுகிறார்கள். அதைவிட பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் பலன் கெட்டு பாகம் தினமும் மூன்று நான்கு பேரிச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்களை அடையலாம் அதன் ஊட்டச்சத்து மதிப்பும் இரட்டிப்பாகும்.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க |  பிளாட் வயிறு, நச்சுனு இடுப்பு, ஒல்லியான உடம்பு வேண்டுமா... இதை செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News