உடல் எடையை உடனே குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க: சில நாட்களில் சூப்பரா குறையும்

Weight Loss Tips: நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் சில மசாலாக்கள் கொண்டே தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். இந்த மசாலாக்கள் நம் உணவின் மணம், சுவை, நிறம் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகளும் இவற்றில் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2024, 10:31 AM IST
  • மஞ்சளில் குர்குமின் உள்ளது.
  • இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.
உடல் எடையை உடனே குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க: சில நாட்களில் சூப்பரா குறையும் title=

Weight Loss Tips: நம் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும், உடல் பருமனை சரி செய்யவும், நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். இதில் உடற்பயிற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், பலருக்கு இதற்கு நேரம் கிடைப்பதில்லை. நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் எடையை நேரடியாக பாதிக்கின்றது. அதிக கலோரி உள்ள உணவுகளை உட்கொண்டால் நமது உடல் எடை மளமளவென அதிகரிக்கத் தொடங்கும். நாம் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் பட்டினி கிடக்கவேண்டும் என அர்த்மில்லை. சரியான உணவை சரியான முறையில் உட்கொண்டால் நமது உடல் எடையை ஆரோக்கியமான வழியின் குறைக்கலாம். 

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் சில மசாலாக்கள் கொண்டே தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்கலாம். இந்த மசாலாக்கள் நம் உணவின் மணம், சுவை, நிறம் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகளும் இவற்றில் உள்ளன. இப்படிப்பட்ட மசாலாக்களில் ஒன்றுதான் மஞ்சள். இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது எடை இழப்பிலும் மிகவும் உதவியாக இருக்கும். எனினும் தொப்பையை குறைத்து எடையை குறைக்க (Weight Loss) மஞ்சளை சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். 

மஞ்சள் எவ்வாறு உடல் எடையை குறைக்கிறது?

மஞ்சளில் (Turmeric) குர்குமின் உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த இரண்டும் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடல் எடையை குறைக்கவும், நோய்களில் இருந்து உடலை காக்கவும் உதவுகின்றன. உடல் எடையை குறைக்க மஞ்சளை எப்படி உட்கொள்வது என இங்கே காணலாம். 

மஞ்சள் பால் (Turmeric Milk)

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பலர் ஏதோ ஒரு நோயின் பிடியில் சிக்கியுள்ளார்கள். சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம் என இவற்றுக்கு பஞ்சமில்லை. மஞ்சள் பால் இவை அனைத்திற்கும் நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பாலில் சிறிது இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடிக்கவும். இது எடையைக் குறைக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மேலும் படிக்க | இந்த 4 ஜூஸ் குடிச்சு பாருங்க, யூரிக் அமில பிரச்சனை எல்லாம் பஞ்சா பறந்துடும்

மஞ்சள் நீர் (Turmeric Water)

மஞ்சள் நீர் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சில நாட்களில் வித்தியாசம் தெரியும். 

உணவு மற்றும் உடற்பயிற்சியும் தேவை

மஞ்சள் உங்கள் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் அதனுடன் நீங்கள் உங்கள் உணவையும் கட்டுப்படுத்த வேண்டும். நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுவிட்டு உடல் எடை குறையும் என்று நினைப்பது தவறான விஷயம். ஆரோக்கியமான குறைந்த கலோரி உணவுகளையே உட்கொள்ள வேண்டும். இதோடு தினமும் உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியமாகும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் மலச்சிக்கல் வரை ... பப்பாளி விதையை தூக்கி எறியாதீங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News