பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!

Yellow Teeth Home Remedies : சிலரது பற்களில் காரணமே இன்றி மஞ்சள் கறைகள் தெரியும். இதை நீக்குவது எப்படி தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 8, 2024, 01:35 PM IST
  • மஞ்சள் பற்களை நீக்க வழி
  • ஈசியான வீட்டு வைத்தியங்கள்
  • டிப்ஸ் இதோ!
பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்! title=

Yellow Teeth Home Remedies : “பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அவர்கள் அணியும் அற்புதமான அணிகலன்களுள் ஒன்று, புண்ணகைதான்” என்று பெரியோர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், நம்மில் பலர் பற்களை காண்பித்து சிரிக்கவே பல சமயங்கங்களில் பற்களை காண்பித்து சிரிக்கவே கூச்சப்படுகிறோம். பற்களுக்கு இடையே இருக்கும் இடைவேளி, பற்கள் நிறம் மாறி இருப்பது, பற்கள் விழுந்திருப்பது ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம். அதிலும், ஒரு சிலருக்கு பற்கள் கரை படிந்து இருப்பதால் பலர் அவர்களை “உத்தப்பல்” என்று கூறி கிண்டல்/கேலி செய்வர். இது, ஒருவர் மீது அவர்களின் அழகின் மீது இருக்கும் நம்பிக்கையையே கெடுத்து விடும். 

ஒருவருக்கு பற்கள் ஒவ்வொரு மாதிரி அமைவது பெரும்பாலான சமயங்களில் அவர்கள் கையில் இருப்பதில்லை. பற்கள் நிறம் படிய, சரியான நிலையில் வாய்வழி சுகாதாரத்தை நாம் பேணாதததும் ஒரு பெரும் காரணமாக இருக்கலாம். இது தவிர, தவறுதலாக கரைபடியும் வகையில் இருக்கும் உணவுகளை சாப்பிட்டதும், கீழே விழுந்து அடிப்பட்டதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இப்படி, பற்களில் படிந்திருக்கும் கறையை எப்படி நீக்க வேண்டும் தெரியுமா? இங்கு பார்ப்போம். 

ஆயில் புல்லிங்:

ஆயில் புல்லிங் முறை, ஆயுர்வேதத்தின் படி பற்களின் கறையை நீக்கும் முறைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நீக்கும் வழிகளுள் இது மிகவும் தொன்மையான வழியாக அறியப்படுகிறது. எண்ணெயை வாயில் வைத்துக்கொண்டு பற்கள் மட்டும் வாயின் அனைத்து பகுதிகளிலும் படும்படி வாய்க்கொப்பளிப்பதே இந்த முறையாகும். வாய்வழி சுகாதாரத்தை பேணிக் காக்க, வாயில் தூர்நாற்றம் மற்றும் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கலாம் என மருத்துவர்களால் நம்பப்படுகிறது. 

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவில், பற்களை வெண்மையாக்கும் குண நலன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது, நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் பற்கள் கறையையும் நீக்க உதவும் என கூறப்படுகிறது. 

எப்படி செய்வது?

>ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் இரண்டு ஸ்பூன் ஹட்ரோஜன் பெராக்ஸைட் சேர்த்து பேஸ்ட் கலந்து கொள்ள வேண்டும். 

>இந்த பேஸ்டை ப்ரஷ் வைத்து பற்களில் 2 நிமிடங்கள் வரை தேய்க்கவும். 

>தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். 

>வாரத்தில் 2 முறை இப்படி செய்யலாம். 

மேலும் படிக்க | டூத்ப்ரஷ் பயன்படுத்தாமலே பற்கள் வெண்மையாக இருக்க சில வழிகள்!

உப்பு போட்டு பல் துலக்குதல்:

உப்பு போட்டு பல் துலக்குதல் நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். இதனால், பல் சொத்தை மற்றும் பற்கள் கறையை நீக்கலாம் என மறுத்துவர்கள் கூறுகின்றனர. 

ஆக்டிவேட்டட் கரியை வைத்து பல் துலக்குதல்:

இதனை பலர் கார்பன் என்றும் அழைக்கின்றனர். மேக்-அப் மட்டுமன்றி டூத் பேஸ்ட் துறையிலும் கூட இந்த கரி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது, பற்களில் இருக்கும் டாக்சின்ஸ் மற்றும் விடாப்பிடியான கறையை நீக்க உதவுகிறது. 

எப்படி செய்ய வேண்டும்? 

>பிரஷ்ஷை நனைத்து, சார்கோல் பவுடரின் உதவியுடன் பல் துலக்க வேண்டும். 

>2 நிமிடங்கள் பல் துலக்க வேண்டும்

>பின்னர் தண்ணீர் வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த உணவுகள் கொல்ஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கும், ஜாக்கிரதை!! டாக்டரின் அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News