கின்னஸ் சாதனை படைத்த கிச்சடியின் செய்முறை!!

-

Last Updated : Nov 5, 2017, 09:20 AM IST
கின்னஸ் சாதனை படைத்த கிச்சடியின் செய்முறை!! title=

தேவையான பொருட்கள்:-

அரிசி - 1 கப் 
பாசிப்பருப்பு - 1/2 கப் 
உருளைக்கிழங்கு - 2 
குடைமிளகாய் - 1 
பச்சை பட்டாணி - 1/2 கப் 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி - 1 இன்ச் 
நெய் - 1-2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 4-6 
கிராம்பு - 4 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:-

முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவவும், பிறகு இரண்டையும் 1/2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் மிளகு, கிராம்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, காய்கறிகள் நன்கு வேகும் வரை வதக்கி விட வேண்டும். நன்கு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை மீண்டு கழுவி சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர வதக்கி விட வேண்டும். 

பின் அதில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான கிச்சடி ரெடி!

Trending News