ஓவர் வெயிட் குறையாம அடம் பிடிக்குதா? இந்த சூப்பர் சூப் குடிச்சா கண்டிப்பா குறையும்

Weight Loss Tips: அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தான் உடல் எடை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணம். பலர் குளிர் காலத்தில் குளிரைத் தவிர்க்க, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற செயல்களைத் தவிர்க்கத் தொடங்குவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2023, 06:56 AM IST
  • இந்த சூப்பை உட்கொள்வது நீரேற்றத்துடன் இருக்க உதவும்.
  • மேலும் அதை குடிப்பதால் அடிக்கடி பசி ஏற்படும் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • சூப்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தடுக்கவும் உதவும்.
ஓவர் வெயிட் குறையாம அடம் பிடிக்குதா? இந்த சூப்பர் சூப் குடிச்சா கண்டிப்பா குறையும் title=

Weight Loss Tips:  இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதிகரிக்கும் எடையால் உடல் தோற்றம் கெட்டுப்போவதுடன், இது ஆரோக்கியத்திலும் பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தங்கள் அதிகரித்த எடையைக் குறைக்க, மக்கள் உணவுக் கட்டுப்பாடு முதல் உடற்பயிற்சி வரை அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இவ்வளவு உழைத்தும் எடை குறைவதில்லை. ஆனால் எடையை குறைக்க இவ்வளவு கடினமான முறைகளை பின்பற்ற வேண்டும் என்றில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

குளிர் காலத்தில் எடை இழப்பு (Weight Loss in Winters)

குளிர்காலத்தில் எடை அதிகரிப்பு பிரச்சனை பொதுவானது. இந்த சீசனில், குளிர்ச்சியை தவிர்க்க, சூடான உணவுகளை சாப்பிடுவது, அடிக்கடி சில ஸ்நாக்ஸ்களை எடுத்துக்கொள்வது, என நாம் அவ்வப்போது எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தான் உடல் எடை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணம். பலர் குளிர் காலத்தில் குளிரைத் தவிர்க்க, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற செயல்களைத் தவிர்க்கத் தொடங்குவார்கள். ஆகையால் வழக்கமான உடல் செயல்பாடுகளும் இல்லாததால் குளிர் காலத்தில் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது. 

குளிர் காலத்தில் தொப்பை கொழுப்பு (Belly Fat) கரைந்து உடல் எடை குறைய சில குறிபிட்ட உணவுகளை தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும். இந்த காலத்தில் நாம் அடிக்கடி உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களையே எடை இழப்பு டயட்டாகவும் மாற்றலாம். 
குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் சுவையான ப்ரோக்கோலி மற்றும் வெங்காய சூப் மிகவும் உதவும். இதை செய்யும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எடை இழப்புக்கான ப்ரோக்கோலி மற்றும் வெங்காய சூப் ரெசிபி

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி - 100 கிராம்
வெங்காயம் - 1 நடுத்தர அளவு
தண்ணீர் - 500 மிலி
ருசிக்கு ஏற்ப உப்பு
கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி

சூப் செய்வது எப்படி?

- சூப் செய்ய, முதலில் வெங்காயம் மற்றும் ப்ரோக்கோலியை வெட்டி, அவற்றை தனியாக வைக்கவும்.
- இப்போது பிரஷர் குக்கரில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் லேசாக வதங்கிய பின் அதனுடன் நறுக்கிய ப்ரோக்கோலியை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- இப்போது அதில் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்
- சூப்பில் தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- இந்த சூப்பை இரவு உணவாக சாப்பிடுங்கள்.

உடல் எடையை குறைக்க ப்ரோக்கோலி-ஆனியன் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Broccoli-Onion Soup For Weight Loss)

கலோரிகள் குறைவு
ப்ரோக்கோலி வெங்காய சூப் ஒரு குறைந்த கலோரி உணவாகும். இது அதிக கலோரிகள் இல்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுடன் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து அதிகம்

ப்ரோக்கோலி மற்றும் வெங்காயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது திருப்தி உணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது, இதனால் எடை குறைக்க (Weight Loss) உதவுகிறது.

மேலும் படிக்க | வெங்காயத்தை எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான்... ஆனா, இப்படி சாப்பிட்டா???

ஊட்டச்சத்து அதிகம்

ப்ரோக்கோலி மற்றும் வெங்காய (Onion) சூப்பில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது எடை குறைப்பின் போது சீரான உணவைப் பராமரிக்கும் நோக்கத்தில் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த விருப்பமாக அமைகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

கருப்பு மிளகில் பைபரின் உள்ளது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். கருப்பு மிளகு உட்கொள்வதால் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவது அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் எட்டை குறைய உதவி கிடைக்கிறது. 

நீரேற்றம்

இந்த சூப்பை உட்கொள்வது நீரேற்றத்துடன் இருக்க உதவும். மேலும் அதை குடிப்பதால் அடிக்கடி பசி ஏற்படும் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சூப்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தடுக்கவும் உதவும். இது எடை கட்டுப்பாட்டில் நன்மை பயக்கும்.

ஆண்டிஆக்சிடெண்டுகள் பண்புகள் நிறைந்தது

ப்ரோக்கோலி மற்றும் வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் ஆண்டிஆக்சிடெண்ட் அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது. உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை ஆதரிப்பதன் மூலம் எடை இழப்புக்கு இது உதவியாக இருக்கும்.

நினைவில் கொள்ளுங்கள், இந்த சூப் உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும், ஆனால் சூப் குடிப்பதால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது. இதற்கு ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை உங்கள் வழக்கமான வாழ்க்கை முறையில் சேர்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யாரெல்லாம் பேரீச்சம்பழத்தை சாப்பிடக்கூடாது? மறந்தா பிரச்சனை பெரிசாயிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News