பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு

பால் என்பது, கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2021, 06:52 PM IST
  • கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்து புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால், பிரச்சனை அதிகமாகும்.
  • மோர் மிகவும் நல்லது. ஜீரண பிரச்சனை எதுவும் ஏற்படுவதில்லை.
பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு title=

பால் என்பது, கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. 

சைவ உணவு உண்பவர்களுக்கு அதிக புரதம் கிடைக்க சிறந்த உணவாக இருப்பது பால். பாலில் அதிக அளவில் ப்ரோட்டீன் உள்ளது. பால் குடிப்பதால் நன்மைகள் அதிகம் உள்ளன என்பதில், மாற்று கருத்து ஏதும் இல்லை, ஆனால் அதனால் சில தீமைகளும் ஏற்படுகின்றன. ஒரு சிலர் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்

கொலஸ்ட்ரால், அதாவது கொழுப்பு  சத்து, அதிகம் இருப்பவர்கள், கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இத்தகையவர்களுக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக பால் எளிதில் ஜீரணம் ஆகாமல் பிரச்சனையை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்து புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால், பிரச்சனை அதிகமாகும். 

ALSO READ | அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து

 

பால் புரதத்தின் முக்கிய ஆதாரமான உணவாக உள்ளது. எனவே, கொழுப்பு கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பால்  மற்றும் பாலில் செய்யப்பட்ட பெரும்பாலான உணவு பொருட்களை  தவிர்க்க வேண்டும். தயிர் மற்றும் மோர்  எடுத்துக் கொள்ளலாம். அதிலும் மோர் மிகவும் நல்லது. ஜீரண பிரச்சனை எதுவும் ஏற்படுவதில்லை. 

அதே போல் இரவில் பால் குடித்த உடனேயே தூங்கினால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தூங்குவதற்குகு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், காலை உணவுக்கு பின்னர் பால் எடுத்துக்கொள்வது நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் வெறும் வயிற்றில் பால் குடிக்கிறீர்கள் எடுத்துக் கொள்ளும் போது அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். அதனால் உங்கள் செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம். 

ALSO READ | GOOD NEWS! DRDO-வின் 2-deoxy-D-glucose கொரோனா மருந்தின் பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News